கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனத்திற்கு கட்டண விலக்கு இருந்தும் வாகன ஓட்டிகளிடம் அடாவடி வசூலில் ஈடுபட்டதால் 500-க்கும் மேற்பட்டோர் வாகனங்களுடன் வழிமறித்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் கன்னியாகுமரி சாலை ஸ்தம்பித்தது.
ஆனால் கடந்த இரு தினங்களாக டி.கல்லுப்பட்டி பகுதி வாகனங்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் அடாவடி வசூல் ஈடுபட்டு வருவதால் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்தது இந்நிலையில் இன்று டி.கல்லுப்பட்டி வாடகை வாகன உரிமையாளர்கள் பொதுமக்கள் இப்பகுதியில் வாடகை வாகனங்கள் சொந்தக்காரர்கள் மற்றும் லாரிகளை நிறுத்தி சுங்கச்சாவடியில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
திருமங்கலம் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சுங்கச்சாவடி அமைந்துள்ளதால் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவையும் மீறி அடிக்கடி உள்ளூர் வாகனங்களுக்கு டோல்கேட் ஊழியர்கள் கட்டணம் கேட்டு வாக்குவாதம் அடிதடியில் ஈடுபடும் சம்பவம் தொடர் கதையாக உள்ளது.
இந்த முற்றுகை போராட்டம் சுமார் 2 மணி நேரமாக நீடித்தது. மேலும் வாகனங்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரிசையாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கோட்டாட்சியர் அனிதா மற்றும் காவல்துறை அதிகாரிகள் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வாகன உரிமையாளர்கள் தங்களது இரண்டு மணி நேர போராட்டத்தை கைவிட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்