அதிகாலையில் பயங்கரமாக வெடித்த பட்டாசுகள் கண்ணாடி உள்ளிட்ட லேசான பொருட்கள் எல்லாம் கீழே விழுந்துள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதியில் இயங்கும் பட்டாசு ஆலை
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் தட்பவெப்ப நிலையின் காரணமாக தொடர்ந்து இங்கு பட்டாசு ஆலைகள் அதிகளவில் செயல்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தரமாக இருக்கும் என்பதால் பல்வேறு இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தீபாவளிக்கு அதிகமாக பயன்படுத்தும் பட்டாசுகள் இங்குதான் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை சாத்தூர் பகுதியில் இயங்கிய பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதால் விண்ணை பிளப்பது போல் சத்தமும், நிலநடுக்கம் போன்ற உணர்வு ஏற்பட்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சாத்தூர் பட்டாசு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுத்துள்ளார்.
தீபாவளி நெருங்கும் சமயத்தில் பட்டாசு வெடி விபத்து
சாத்தூர் அருகே உள்ள சித்தப்பள்ளி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் தீபாவளிக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்க தயாராக இருந்த இருப்பு அறையில் பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உராய்வு காரணமாக பட்டாசு விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வெடி விபத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் சாத்தூர் சுற்றுவட்டார பகுதியில் 15 கிலோ மீட்டருக்கும் மேல் அதிர்வு காணப்பட்டதாக உறுதியான தகவல் கிடைத்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டு சுற்று வட்டார பகுதிகள் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்
இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் ஜெயசீலன் தெரிவிக்கையில், "விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிந்தப்பள்ளி எனும் கிராமத்தில் செயல்பட்டு வரும் திருமுருகன் ஃபயர் ஒர்க்ஸ் நிறுவத்தில் இன்று அதிகாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. அதிகாலை என்பதால் யாரும் அங்கு பணியாளர்கள் இல்லை. எனினும் லோடு ஏற்றுவதற்காக லாரி ஒன்று அங்கு வந்துள்ளது. அதனால் சிறிய தீப்பொறி ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம், என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த திருமுருகன் ஃபயர் ஒர்க்ஸ் அனுமதி பெற்று செயல்படக்கூடிய நிறுவனமாகும். இங்கு பணியாளர்கள் யாரும் அந்த சமயத்தில் இல்லை என்பதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. வந்த லாரி ஓட்டுநரும் அங்கிருந்து உடனடியாக தப்பித்துவிட்டார். பட்டாசு விபத்தில் சம்மந்தப்பட்ட லாரியும் விபத்தில் சிக்கியது. எனினும் தீ விபத்தினால் அங்குள்ள ஆறு அறைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. தீயணைப்பு துறையினர் முழுமையாக தீயிணை கட்டுக்குள் கொண்டுவந்து விட்டனர். இந்த வெடி விபத்தின் காரணமாக சுற்றுவட்டார பகுதியில் உள்ள 25 க்கு மேற்பட்ட வீடுகளில் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கான பணிகள் நடைபெற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ‘திருடுனவரு பைக்க திரும்ப குடுத்தா ரூ.10 ஆயிரம் தரேன்’- தாய் வாங்கிக் கொடுத்த பைக், பரிதவிப்பில் மகன்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்