விருதுநகர் அருகே காரியப்பட்டியில் கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 


விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து நேரிட்டுள்ளது. ஆவியூர் அருகே கீழ உப்பிலிகுண்டு கிராமத்தில் நேரிட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 


கல் குவாரியில் நேரிட்ட வெடிவிபத்தில் பல சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அச்சமும் ஏற்பட்டுள்ளது. 


கல் குவாரியை மூட வலியுறுத்தி மக்கள் சாலை மறியல்: 


கீழ உப்பிலிகுண்டு தனியார் கல் குவாரியை மூட வலியுறுத்தி கடம்பன்குளம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.