’வெளிநாட்டில் சிகிச்சை பெறும் விஜயகாந்த் எப்படி இருக்கிறார்’- மதுரையில் மனம் திறந்த விஜயபிரபாகரன்...!

’’திமுக ஆட்சியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது, அனைத்து சாதி அர்ச்சகர் அறிவிப்பை வரவேற்கின்றோம்"

Continues below advertisement
மதுரை முனிச்சாலை பகுதியில் தே.மு.தி.க நிர்வாகி பாலன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மகனும், தே.மு.தி.க இளைஞரணி செயலாளருமான விஜய பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 
 
விஜயகாந்த் உடல்நல பரிசோதனைக்காக மட்டுமே வெளிநாடு சென்றுள்ளார். தற்போது அவரது உடல் நல்லபடியாக உள்ளது. சீக்கிரம் முழுமையாக குணமடைந்துவிடுவார். பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள், பெற்றோர்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனோ அடுத்த கட்ட பரவல் இல்லாமல் இருக்க நெறிமுறைகளை கடிபிடிக்க வேண்டும்.
 
 
*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
 
உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க நிச்சயமாக போட்டியிடுவதற்கான முடிவை தலைவர் வந்தவுடன் அறிவிப்பார். தொடர்ச்சியாக தே.மு.தி.க தோல்வியை சந்திப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜய பிரபாகரன், அரசியலில் வெற்றி தோல்வி என்பது  அனைத்து கட்சிகளுக்கும் சகஜம், கடந்த ஆட்சியின் போது அ.தி.மு.கவில் பெரிய ஆளாக இருந்த சிலர் தற்போது என்ன ஆனார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், முன்பை விட தேமுதிக தோல்வியிடத்தில் உள்ளோம் என்பதை உணர்ந்துள்ளோம், தே.மு.தி.க தொடங்கியதற்கான இலக்கை அடையும் வகையில் இனி செயல்படுவோம்.
 
 
தி.மு.க ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது "விமர்சனம் சொல்ல ஆறு மாதம் காலமாவது ஆட்சி முடிய வேண்டும், இதுவரை தி.மு.க ஆட்சியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது, அனைத்து சாதி அர்ச்சகர் அறிவிப்பை வரவேற்கின்றோம்" என்று தெரிவித்தார்.

 
மேலும் தே.மு.தி.க தொண்டர்கள் சிலர், அண்ணன் விஜயகாந்த் மீண்டும் வரவேண்டும் அப்போது தான் எங்கள் கட்சியின் பழைய மாஸை பிடிக்க முடியும். தே.மு.தி.க தவிர்கமுடியாத கட்சியாக இருந்த பழைய நிலைக்கு வருவோம். உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு இடங்களில் வெற்றியை தக்க வைப்போம் ” என நம்பிக்கை தெரிவித்தனர்
 
Continues below advertisement