Varichiyur Selvam: கையில் சிறுத்தை, கழுத்தில் காளை, சிங்கம்... முரட்டு சங்கிலியுடன் மிரட்டும் லுக்கில் வரிச்சூயூர் செல்வம்

வரிச்சியூர் செல்வம் நடமாடும் நகைக்கடை போல நகைகளை அணிந்து நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார். இதனைப் பார்த்த வழக்கறிஞர்களும் பொதுமக்களும் வரிச்சியூர் செல்வத்தை வியப்புடன் பார்த்தபடி நின்றனர்.

Continues below advertisement

கழுத்தில் முக்கால் கிலோ தங்க மாலை, தங்கத்தில் சிறுத்தை , சிங்கம், காளையென கிலோ கணக்கில் தங்க நகையை அணிந்து நீதிமன்றத்திற்கு  வந்த வரிச்சியூர் செல்வம்.

Continues below advertisement

மதுரை வரிச்சியூர் செல்வம்

முன்னாள் ரவுடி, முன்னாள் தேடப்படுவர் என்றெல்லாம் பல்வேறு புனைப்பெயர்கள் இருந்தாலும், அதை கடந்து நடமாடும் நகைக்கடையாக சமீப காலங்களாக அறியப்படுகிறர் வரிச்சியூர் செல்வம். மதுரை மாவட்டம் வரிச்சூர் கிராமத்தை சேர்ந்த செல்வத்தின் துவக்க காலம், ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து என்று இருந்தது. பிந்நாளில் அவர் மீது நிறைய வழக்குகள் வர, அதை எதிர் கொள்வதில் அவருக்கான காலம் ஓடியது. ஒரு கட்டத்தில் எல்லாம் போதும் என ஒதுங்கி நிற்கும் வரிச்சூர் செல்வம், இன்றும் ரவுடியாகவே அறியப்படுகிறார். ஆனால், அதை விரும்பாத அவர், கோயில் விழாக்களுக்கு செல்வது, உறவினர் இல்ல நிகழ்ச்சிகளுக்கு செல்வது என ஒரே குஷி மோடில் பயணித்துக் கொண்டிருக்கிறார். எப்போதுமே கழுத்தில் கிழே கணக்கில் நகைளை அணிந்திருப்பது, அவரது அடையாளமாகிவிட்டது. கையில் பிரேஸ்லெட், மோதிரங்கள் என உடலில் எங்கெல்லாம் நகை அணிய முடியுமோ... அங்கெல்லாம் அள்ளி அள்ளி நகைகளை அணிந்து கொள்வதை தனது விருப்பமாக தொடர்ந்து வருகிறது. நடமாடும் நகைக்கடையாக வலம் வரும் வரிச்சூர் செல்வம், சீசனுக்கு ஏற்ப தன் உடலில் நகையை அதிகரித்துக் கொண்டே இருப்பார். கொரோனா காலத்தில் 10 பவுன் எடை கொண்ட தங்க முககவசத்தை அணிந்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தவர். இந்நிலையில் கழுத்தில் முக்கால் கிலோ தங்க மாலை , தங்கத்தில் சிறுத்தை , சிங்கம், காளையென கிலோ கணக்கில் தங்க நகையை அணிந்து நீதிமன்றத்திற்கு  வந்த வரிச்சியூர் செல்வத்தை பலர் வெறிக்க பார்த்தனர்.

புது லுக்கில் வரிச்சியூர் செல்வம்

மதுரை வரிச்சியூர் செல்வம் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக வருகை தந்தார். புதியதாக வாங்கிய சொகுசு காரில் வரிச்சியூர் செல்வம் இறங்கினார். அவர் எப்போதும் அணிந்திருக்கும் தங்க நகைகளை மாற்றி விட்டு புதியதாக கழுத்தில் முக்கால் கிலோ எடையுள்ள முறுக்கு செயினையும், கை விரல்களில் தங்க சிறுத்தையும் கழுத்தில் தங்க சிங்கமும்,  தங்க கொம்புடன் கூடிய காளையையும் அணிந்தும் உடம்பெல்லாம் தங்க நகையாக ஒரு கிலோ எடையுள்ள நகைகளை அணிந்தபடி நடமாடும் நகைக்கடை போல அணிந்து நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார். இதனைப் பார்த்த வழக்கறிஞர்களும் பொதுமக்களும் வரிச்சியூர் செல்வத்தை வியப்புடன் பார்த்தபடி நின்றனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Rajasthan:அய்யய்யோ! ராஜஸ்தானில் 50 டிகிரி செல்சியஸ் - மக்கள் எப்படி தற்காத்து கொள்கிறார்கள்?

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - PM Modi Kanyakumari Visit: விவேகானந்தர் பாறையில் இரவு பகலாக தியானம்! பிரதமர் மோடி ப்ளான்!

Continues below advertisement