Madurai ; ”போய் வா தம்பி” - வெண்ணிலா கபடி குழு திரைப்பட நடிகர் ஹரிவைரவனுக்கு நடிகர் சூரி இரங்கல் !
வாழ்வாதரமாக இருந்த நடிகர் ஹரிவைரவன் உயிரிழந்த நிலையில் உடைந்த ஓட்டு வீட்டில் வாழ்வாதரத்திற்கு வழியின்றி நிற்கதியாய் நிற்கும் அவரது குடும்பத்தினர் நடிகர் சங்கத்தினருக்கு கோரிக்கை.
Continues below advertisement

ஹரி வைரவன்
மதுரையை சேர்ந்த நடிகரான ஹரிவைரவன் (38) வெண்ணிலா கபடி குழு-1 மற்றும் வெண்ணிலா கபடி குழு -2 , குள்ளநரிக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார். வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் விஷ்ணு விஷாலின் நண்பராக கபடி குழுவில் நடித்த நடிகரான ஹரிவைரவனின் நடிப்பு அந்த திரைப்படத்தின் முக்கிய இடம் பிடித்து ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்று படத்தின் வெற்றிக்கு உதவியது.
Continues below advertisement
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கிட்னியில் பிரச்சினை இருப்பதாக கூறப்பட்டது. அதற்கான சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலாமானார். நடிகர் ஹரிவைரவனின் உடலானது மதுரை கடச்சனேந்தல் முல்லைநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ஹரிவைரவனுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு கவிதா (30) என்ற பெண்ணுடன் திருமணமாகிய நிலையில் 2 வயதில் யோஷினிஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளது.
நடிகர் ஹரிவைரவனின் ஊதியத்தை வைத்து மட்டுமே குடும்பத்தை நடத்தி வந்த ஹரிவைரவனின் மனைவி தற்போது உடைந்த ஓட்டு வீட்டில் வசித்துவரும் நிலையில் வாழ்வாதரமாக இருந்துவந்த ஹரி வைரவனின் மறைவால் செய்வதறியாது நிற்கிறார். தமிழ்நாடு நடிகர் சங்கம் உயிரிழந்த நடிகர் ஹரிவைரவனின் குழந்தை மற்றும் குடும்பத்தின் வாழ்வாதரத்திற்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என ஹரிவைரவனின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடிகர் ஹரிவைரவன் காலமான நிலையில் நடிகர்கள் விஷ்ணுவிஷால், திரைப்பட இயக்குநர் பாலாஜி மற்றும் நடிகர்கள் அம்பானி சங்கர், பிளாக் பாண்டி உள்ளிட்ட நடிகர் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் சூரி தன் ட்விட்டர் பக்கத்தில் “இன்று காலை தம்பி வைரவனின் மறைவு செய்தி கேட்டு பெரும் துயர் கொண்டேன். பிரிவின் மீளா துயரில் தவிக்கும் குடும்ப த்தார் க்கு அந்த ஆத்தா மீனாட்சி எல்லா தைரியத்தையும் தர வேண்டுகிறேன். போய் வா தம்பி” என தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.