திண்டுக்கல்லில் நடைபெற்ற பா.ஜ.க பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், தேர்தலுக்கு தயாராவதற்காக எங்களுடைய பூத் பொறுப்பாளர்கள் மாநாடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று திண்டுக்கல்லில் நடைபெற்று இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
தமிழகத்தின் அரசியல் கலாச்சாரத்தில் மெச்சூடான ஸ்டாண்டர்ட் பேஸ் பார்ட்டி அப்படின்னா பாரதிய ஜனதா பார்ட்டி, எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று இந்த மாநாட்டின் மூலமாக உங்களுக்கு நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். கட்டுப்பாடும் ஒழுங்கும் ஒரு அரசியல் கட்சியிலே மிக மிக முக்கியமானது. அதைப் பயிற்றுவிக்கும் விதமாக இந்த கட்சி இருக்கிறது என்பது பெருமை தரக்கூடியது என வானதி சீனிவாசன் பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சொளந்தரராஜன் பேசும்போது,
நாங்கள் கோட்டைக்கு செல்லும்போது இரட்டை இலையுடன் தாமரை மலரும். கலாச்சார போரை நிலை நிறுத்துவோம். திமுக மக்களுக்கு எதிர்ப்பாக இருக்கிறது நாங்கள் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். அதற்கு உதாரணம் ஜிஎஸ்டி என திண்டுக்கல்லில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்தார்.
மேலும் திமுகவின் இந்து எதிர்ப்பு பிரச்சனையினால் நாங்கள் கலாச்சாரப் போரில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். கீழடி பொறுத்தவரை நாங்கள் தமிழர்களின் தொன்மையை மறைப்பது போல் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழர்களின் தொன்மையை வெளிக் கொண்டு வருவதற்கு அதிக நிதி கொடுத்தவர் பாரதப் பிரதமர். அபிராமி அம்மன் கோவில் திண்டுக்கல் மலைக்கோட்டை மேல் இருந்தது திப்பு சுல்தான் காலத்தில் கீழே கொண்டு வந்து வைத்து விட்டனர். அதை மீண்டும் மேலே கொண்டு சென்று வைப்பதற்கு திராவிட முன்னேற்ற கழகம் எதிர்ப்பாக இருக்கிறது.
நாங்கள் கோட்டைக்கு செல்லும்போது இரட்டை இலையுடன் தாமரை மலரும். கலாச்சார போரை நிலை நிறுத்துவோம். திமுக மக்களுக்கு எதிர்ப்பாக இருக்கிறது நாங்கள் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். அதற்கு உதாரணம் ஜிஎஸ்டி. வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார் இது குறித்த கேள்விக்கு, வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள். ஹைட்ரஜன் பாம் போடுகிறேம் என்று சொல்கிறார்கள். பாரதப் பிரதமர் ஆப்ரேஷன் சிந்தூரவே நடத்திக் காண்பித்தவர். எந்த ஹைட்ரஜன் பாம் போட்டாலும் பாரத பிரதமர் வெற்றி பெறுவார். ஏற்கனவே விஜய்க்கு பதில் சொல்லிவிட்டு அவர் மாநில அரசையும் குற்றம் சாட்டுகிறார்.