அண்ணா 115-வது பிறந்தநாள் விழா மாநாடு மதுரையில் நடைபெற்றது. இதில் மதிமுக முதன்மை நிலை செயலாளர் துரை வைகோ மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினர் அப்போது பேசிய வைகோ குறிப்பிடுகையில், "மதுரை மக்களே நீங்கள் தண்ணீர் குடிக்கிரீர்கள் என்று சொன்னால் அது வைகோவால் தான். முல்லை பெரியாறுக்காக 3 முறை நடைபயணம் மேற்கொண்டேன். இதுவரை 7000 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்டுள்ளேன். இதுவரை எந்த நட்சத்திர விடுதியிலும் தங்கியதில்லை. மத ஒற்றுமைக்காக கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக 1200 கிலோமீட்டர் பயணித்தேன். முதல்வர் ஸ்டாலின் எடுத்துக்கொடுத்த கொடியை கையில் பிடித்துக்கொண்டு நியூட்ரினோ திட்டத்தை தடுக்க வழக்கு தொடுத்தேன். அதை போலதான் ஸ்டெர்லைட்டை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தே, நடைபயணம் மேற்கொண்டேன். சென்னை விமான நிலையத்தில் ஒருவர் வெளியூர்காரர் நின்று கொண்டிருந்தார். நான் இடம் கொடுத்தேன் உங்களை போன்றவர்கள் முதல்வராக இருக்க வேண்டும் என்று சொன்னார். யார் அவர் என்று சிந்தித்தேன் பின்னர் ஒரு கார்டை குடுத்தார் அதில் ஸ்டெர்லைட் நிர்வாகி என்று தெரிந்தது.
அட்டர்னி ஜெனரல் தாயகத்தில் என்னை சந்தித்தார் போரட வேண்டாம் என்று சொன்னார். ஆனால் அவரை வெளியே போக சொல்லிவிட்டேன். இப்போதும் நியூட்ரினோ கொண்டு வர வாய்ப்புள்ளது. மேகதாது திட்டத்தை எதிர்த்து 12 ஆண்டுகளுக்கு முன்பு போராடினேன். தஞ்சையில் ஊர் ஊராக சென்று மேகதாது குறித்து பேசினேன். எந்த இடத்திலும் நான் கொடி கட்டவில்லை. நியூட்ரினோ போல மேகதாதுவையும் எதிர்தேன். பிரபாகரன் என்னை நேசித்தார். அவர் அறையில் என் புகைப்படம் இருப்பதாக ஒருவர் சொன்னார். ஒரு முறை கடுமையான யுத்தத்தின்போது நான் வருகிறேன் என்று சொன்னதுக்கு பிரபாகரன் வரவேண்டாம் என்று சொல்லி அனுப்பினார். 23 நாட்கள் அவருடன் தங்கி இருந்தேன். அவர் என்னை போக சொன்னார். ஆனால் நான் போக மாட்டேன் என்று சொன்னேன். அதன்பின்பு கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் வைகோவின் துணிச்லுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் சாகலாம் என்று எழுதியிருந்தது. அதன் பின்பு பிரபாகரன் மகன் பாலசந்திரன் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் எனது அம்மா உண்ணாவிரதம் இருந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மதுவை ஒழிக்க போராட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து எனது தாயார் இறந்துபோனார். என் தம்பி சிறை சென்றுள்ளார்.
நான் பேச நினைப்பது எப்படி என் மகனுக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை. கலைஞருக்கு இருமுறை ஆபத்து வந்தது. நான்தான் காப்பாற்றினேன். கலைஞர் சொல்வார் நான் நினைப்பதை நீ பேசுகிறாய் என்று அதே போல நான் பேச நினைப்பதெல்லாம் என் மகன் பேசினார். 3 ஆண்டுகள் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது வைகோ எங்கெல்லாம் செல்வானோ அங்கெல்லாம் துரை வைகோ இருந்தார். பதவிக்காக என் மகன் இல்லை என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் நினைத்ததை போலவே பதவி ஆசை இல்லை என்று என் மகன் சொன்னான் ” என்று கூறியதுடன் உரையை முடித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "இனி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டோம்.." அமேசான் அதிரடி அறிவிப்பு..! வாடிக்கையாளர்களே படிங்க..