மானாமதுரை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்க தான் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் தண்ணீரில் விளையாடி கொண்டிருக்கின்றனர்.


கோடை மழை


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த  கொளுத்தும் வெயில் காரணமாக நீர் நிலைகளில் இருந்த தண்ணீர் வறண்டு வந்த நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழையும் பெய்ய துவங்கியுள்ளது.


மதுரையில் மழை


மதுரை மாவட்டத்தில் நேற்று (15.5.2024) வாடிப்பட்டியில் அதிகபட்சமாக 86 மி.மீட்டர் மழைப்பொழிவும், குறைந்தபட்சமாக எழுமலை பகுதியில் 0.60 மி.மி மழைப்பொழிவும்,  மாவட்ட முழுவதும் 31.70மி.மீ சராசரியாக மழைப்பொழிவும் பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் நகர் பகுதிகளை கடந்து புறநகர் பகுதியான வாடிப்பட்டி, மேட்டுப்பட்டி, விமானநிலையம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் அதிகளவு மழை பெய்துள்ளது.


சிவகங்கை மழை நிலவரம்


அதே போல் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று (15.5.2024) திருப்புவனம், திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, காளையார்கோவில், சிங்கம்புணரி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததுள்ளது. குறிப்பாக சிங்கம்புணரியில் 136.40 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 18.40 மி.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடதக்கது.


வைகையில் தண்ணீர் திறப்பு


இந்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு சார்பில் ஆணை வெளியிடப்பட்ட நிலையில்  வைகை அணையிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 5 மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் வசிப்போர் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில்


சிறுவர்கள் ஆற்றில் விளையாட்டு


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் வைகை ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரித்து உள்ளது. ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது என்று அறிவுறுத்தி இருந்த நிலையில் மானாமதுரை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்காக தான் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் தண்ணீரில் விளையாடி கொண்டிருக்கின்றனர். ஏதேனும் உயிர் இழப்பு ஏற்படும் முன் மானாமதுரை நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


மதுரையில் எச்சரிக்கை


மதுரையில் நீண்ட நாட்களுக்கு பின்பு வைகையாற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் ஏராளமான பொதுமக்கள் யானைக்கல் தடுப்பணையில் தூண்டில் மூலமாக மீன்களை பிடித்து வருகின்றனர். அப்போது ஏராளமானோருக்கு தூண்டிலில் பெரிய அளவிலான கெண்டை மீன்கள் சிக்குவதால் அதிகளவில் மீன்களை பிடித்து சாக்குமூட்டைகளில் எடுத்துச் செல்கின்றனர். இதே போல ஆற்றுபகுதிகளில் கரைகளை ஒட்டி ஏராளமானோர் தூண்டிலில் மீன்பிடித்துவரும் நிலையில் தூண்டில் போட்டவுடன் மீன் சிக்குவதால் அதிகளவில் மீன்களை பிடித்து வருகின்றனர். தூண்டிலில் 100 கிராம் முதல் 500 கிராம் எடை அளவுல்ல மீன்களும் தூண்டிலில் சிக்குவதால் மகிழ்ச்சியுடன் மீன்களை பிடித்துச் செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் ஆழமான தண்ணீர் செல்லக்கூடிய பகுதியில் எச்சரிக்கையை மீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த பொதுமக்களையும் காவல்துறையினர் வெளியேற்றினர்.


 


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - “அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்


மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!