தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை மற்றும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட அதிகப்படியான நீரால் அணையின் நீர்மட்டம் கடந்த கடந்த வாரம் 70.50 அடியை எட்டியதை தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.


Mansoor Ali Khan: ”த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு” .. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மன்சூர் அலிகான்..!



அணையில் இருந்து ஏற்கனவே திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் முதல் போக பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிலையில், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை அணை பூர்வீக பாசன பகுதிகளான 1, 2, 3 ஆகிய மூன்று பாசன பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் தண்ணீரை சேமிக்கும் வண்ணம், வைகை அணையில் இருந்து நீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.



அவர்களின் கோரிக்கையை ஏற்று  வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 5 -ந் தேதி வரை 3 கட்டமாக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக  நேற்றிலிருந்து  நவம்பர் 29-ந்தேதி வரை மொத்தம் ஏழு நாட்களுக்கு வைகை அணை பூர்வீக பாசன பகுதி 3-ல் உள்ள கண்மாய்களுக்கு மொத்தம் 1504 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வருகிற டிசம்பர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரை 5 நாட்களுக்கு வைகை அணை பூர்வீக பாசன பகுதி 2-ல் உள்ள 4 கண்மாய்களுக்கு 619 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.


Movie Release Today: சினிமா ரசிகர்களே.. இன்று மட்டும் 16 படங்கள் ரிலீஸ்.. என்னென்ன தெரியுமா?



அதன் பின்னர் டிசம்பர் 6ம் தேதியில் இருந்து 8-ம் தேதி வரை 3 நாட்களுக்கு வைகை அணை பூர்வீக பாசனப்பகுதி 1-ல் உள்ள கண்மாய்களுக்காக 342 மில்லியன் கனஅடி தண்ணீரும் திறக்கப்பட உள்ளது. வைகை அணையில் இருந்து ஏற்கனவே பெரியாறு பிரதான கால்வாயில் முதல் முதல்போக பாசனத்திற்காக வினாடிக்கு 2099 கனஅடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக வினாடிக்கு 4000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வினாடிக்கு 6,099 கன அடி நீர் வைகை ஆற்றில் வெளியேறி வருவதால், வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.