எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்., இது குறித்து முதல்வர் அதற்கு பதில் அளித்து விட்டார். எந்த நேரத்திலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார்.



 

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதல் நாள் நிகழ்ச்சியாக மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் திடலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து,  மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் பங்கேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி துறை சார்ந்த அதிகாரிகளிடம், தமிழக அரசின் விரிவான திட்டங்களையும், திட்டங்களை மக்களிடையே எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும், மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனை வழங்கினார்.

 


 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்...,” முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்டத்தினுடைய சிறப்பு திட்ட செயலாக்க துறை மூலம் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். தற்போது பல்வேறு அரசு அதிகாரிகளுடன் திட்டம் குறித்து ஆய்வு நடத்தினோம். கடந்த முறை திட்டங்கள் குறித்து செப்டம்பரில் ஆய்வு நடத்திய தொடர்ந்து இன்று ஆட்சியர் அலுவலகத்தில் கடந்தாண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எந்த அளவு நடைபெற்று வருகிறது.? எவ்வளவு பணிகள் முடிவுற்றது.? எந்தெந்த பணிகளில் சுணக்கம் உள்ளது குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தோம். அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். எடப்பாடியின் வெள்ளை அறிக்கைக்கு தமிழக முதல்வர் ஏற்கனவே பதிலளித்திருக்கிறார். திருப்பி திருப்பி அதையே கேட்டால் என்ன செய்வது.?

 

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல்வருக்கு கோரிக்கை வைத்தது குறித்து கேள்விக்கு.?

 

அதை எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்., இது குறித்து முதல்வர் அதற்கு பதில் அளித்து விட்டார். எந்த நேரத்திலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார்.