இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் சதுர்த்தியின்போது விநாயகர் சப்பரத்திலிருந்த இரும்பு கம்பி டிரான்ஸ் பார்மரில் உரசியதில் மின்சாரம் தாக்கியதில் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 33), முனீஸ் வரன் (வயது 24), சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சொக்கநாதன் புத்தூர் பகுதியில் உள்ள தெருவில் விநாயகர் சிலை வைத்து சதுர்த்தி விழா கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் முக்கிய தெருவழியாக விநாயகர் ஊர்வலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. குறுகலான பாதையில் மின்விளக்கு வசதி இல்லாத நிலையில் டிரான்ஸ்பார்மர் எதிரே உரசாமல் இருக்க ஒதுங்கும் போது சப்பரத்தில் இருந்த அலங்கார இரும்பு வளைவு டிரான்ஸ்பாரமில் உரசிய போது மின் சாரம் தாக்கியதில் 5 பேர் தூக்கி வீசப்பட்டனர்.
கூடுதல் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - வெள்ள அபாய எச்சரிக்கை இருந்தாலும் அச்சமடைய தேவையில்லை - மதுரை மாவட்ட ஆட்சியர்
இதில் சொக்கநாதன்புத்தூர் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் வயது 24 , மாரிமுத்து வயது 33, செல்வகிருஷ்ணன் வயசு 32, செல்லப்பாண்டி வயசு 42, உள்ளிட்ட 5 பேர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களை தென்காசி மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற பொழுது அங்கே சிகிச்சை பலனின்றி மாரிமுத்து மற்றும் முனீஸ்வரன் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். இது குறித்து சேத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவின் போது விருதுநகர் மாவட்டத்தில் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்