துபாயில் இருந்து மதுரை வந்த  பயணி விமான நிலைய குப்பைத் தொட்டியில் வீசி சென்ற 14,36,472 ரூபாய் மதிப்புள்ள 281 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

 

துபாயில் இருந்து மதுரைக்கு தினமும் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8:20 மணி அளவில் துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 170 பயணிகள் வந்தனர். இதில் பயணம் செய்த பயணி ஒருவர் தன்னிடமிருந்த பேஸ்ட் போன்ற தங்கப்பொருளை குப்பைத் தொட்டியில் வீசி சென்றுள்ளார்.

 



இதனை பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்  கண்டுபிடித்து  இதுகுறித்து சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் பேஸ்ட் போன்ற பொருளை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் 14 லட்சத்து 36 ஆயிரத்து 472 ரூபாய் மதிப்புள்ள 281 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து விமானத்தில் வந்த பயணியை அடையாளம் காணும் வகையில் வீடியோ காட்சிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

 




 

மதுரை விமான நிலையத்தில் 14 லட்சத்து 36 ஆயிரத்து 472 ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மதிப்புள்ள தங்கத்தை குப்பைத்தொட்டியில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.