திண்டுக்கல் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொகுதி பொறுப்பாளர்கள் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கினார். ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளின் பொறுப்பாளர்கள் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளதாகவும் இந்தக் கூட்டத்தில் மதுரை தெற்கு வடக்கு மேற்கு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 




தேர்தல் கூட்டணி எல்லாம் உறுதியான பிறகு உங்களுக்கு தான் முதலில் சொல்வோம் உறுதியான பிறகு சொல்வது தான் நாகரிகம் என்றார். ஜி‌.கே.வாசன் குறித்த கேள்விக்கு பாஜகவை அழைத்து தான் போகவில்ல என்றும் நான் நட்பு ரீதியாக மட்டும் தான் போய் பார்த்து வந்தேன் என்று தெளிவாக ஜி.கே. வாசன் கூறியுள்ளார். உறுதியாக நாங்கள் கூட்டணியில் போட்டியிடுவோம் அப்படி என்கிற நிலைப்பாட்டில் தான் உள்ளோம் உறுதியான பிறகு நாங்களே கூறுகிறோம் என்றார். அதிமுகவுக்கு எதிராக உங்களுடைய வியூகங்கள் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு, எப்படி தீய சக்தி திமுகவுடன் நாங்கள் பயணிக்க முடியாதோ அதேபோல் எடப்பாடி பழனிச்சாமியுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயணிக்க மாட்டார்கள். அதுவே என்னுடைய கருத்தும்.




எந்த காலத்திலும் பழனிச்சாமி என்ற துரோகியுடன் நாங்கள் இணைந்து செயல்பட மாட்டோம் அதே மாதிரி அம்மாவினுடைய உண்மையான தொண்டர்கள் என்று என்று தங்களை நம்புவார்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் . ஓபிஎஸ் நானும் தேர்தலை தாண்டி  அரசியலில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளோம். அம்மாவின் உடைய உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலில் செயல்படுவோம் பழனிச்சாமியின் வாய் எப்படி வேண்டும்னாலும் பேசும் துரோகத்தை தவிர வேறொன்றும் அவருக்கு தெரியாது. பழனிச்சாமி செய்ததது துரோகம்.




நான்காண்டு ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தது யார் என்று சின்ன குழந்தைக்கு கூட தெரியும். அவரது ஆட்சியை காப்பாற்றியவர்களுக்கும் துரோகம் செய்தார். பழனிசாமியை முதல்வர் ஆக்கியவருக்கும் துரோகம் செய்தார். ஆட்சிக்கு பிரச்சனை வந்தபோது கை தூக்கி காப்பாற்றியவருக்கும் துரோகம் செய்தார். அந்த ஆட்சியை பாதுகாத்தவர்களுக்கும் துரோகம் தமிழ்நாடு மக்களுக்கும் துரோகம். துரோகம் எனும் கத்தியை பழனிச்சாமி கையில் எடுத்துள்ளார் அந்த துரோகத்தாலேயே அரசியலில் வருங்காலத்தில் வீழ்வார் 


திண்டுக்கல் சீனிவாசன் குறித்த கேள்விக்கு, திண்டுக்கல் சீனிவாசன் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராகியே தீருவோம் என்று பேசினார் அவர் என்ன பேசுவார் என்று அவருக்கே தெரியாது. அதையெல்லாம் பெரிது படுத்த வேண்டாம். 40 தொகுதிகளிலும் தாங்கள்தான் வெல்வோம் என எடப்பாடி கூறியது குறித்து கேள்வி கேட்டதற்கு அதையெல்லாம் பகல் கனவு பலிக்கவே பலிக்காது எப்போதும் ஜெயிக்கப் போவதில்லை அவர் வீழப்போகிற நேரம் இது. கூட்டணி குறித்த கேள்விக்கு சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் எந்தக் கட்சி என்று நான் சொல்ல விரும்பவில்லை நீங்கள் எப்படி கேட்டாலும் ஒரே பதில் தான் நாங்கள் கூட்டணி உறுதியான பிறகு தான் எதையும் கூற முடியும்திமுகவின் செயல்பாடுகள் எப்படி என கேள்விக்கு திமுக ஓட்டிற்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம் என முடிவு எடுத்து இருப்பதாக தகவல்.




கடந்த மூன்று ஆண்டு ஆட்சி காலத்தில் மக்கள் திமுக ஆட்சியின் மீது  கடும் கோபத்தில் உள்ளனர். விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், நெசவாளர்கள், சிறு குறு தொழில் செய்பவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் ஏண்டா இந்த ஆட்சியை கொண்டு வந்தோம் என பெரிய வருத்தத்தில் உள்ளார்கள். அந்தக் கோபம் திமுக கூட்டணியையே வீழ்த்தப் போகிறது. இந்திய கூட்டணி குறித்த கேள்விக்கு மத்தியிலே இந்திய கூட்டணி எங்கே அமைந்தது என்று இப்போது தெரியாமல் போய்விட்டது.


தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் அதிமுக கண்டா வர சொல்லுங்க என நோட்டீஸ் ஒட்டிய கேள்விக்கு இரண்டு பேருமே காணவில்லை என்ன மக்கள் சொல்கின்ற காலம் வரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நான் இல்லை அதனால் அதைப் பற்றி நான் கருத்து கூற முடியாதுஅதிமுக கொடி மற்றும் சின்னத்தை பாராளுமன்ற தேர்தலுக்குள் கைப்பற்றி விடுவோம் என்று ஓபிஎஸ் கூறியதை குறித்து கேள்விக்கு இதுகுறித்து ஓபிஎஸ் இடமே கேட்க வேண்டும். அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தான் நாங்கள் எண்ணுகிறோம் ஆனால் பழனிசாமி போன்ற தீய சக்தி தான் அதை தடுக்கிறது என கூறினார்.