விமானம் & ரயில்கள் ரத்து
மிக்ஜாம் புயல் கரையை நோக்கி மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் அதி கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இதன் காரணமாக ஏற்கனவே 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த மின்சார ரயில்கள், மிகவும் மோசமான வானிலை காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஒரு மணிநேரத்திற்கு ஒரு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் இயக்க முடியாத சூழல்
அதே போல் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பேருந்துகள் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. தொடர் மழையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று இரவு முதல் தற்போது வரை சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது, இதனால் ஓஎம்ஆர் சாலையில் தனியார் கல்லூரி எதிரே இடுப்பு அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளது இதனால் வாகன ஓட்டிகள் தத்தி தழுவி ஆபதுடன் பயணிக்கின்றனர். அங்குள்ள சுவற்றை அப்புறப்படுத்தி கடல் நீர் போல் சூழ்ந்துள்ளார் மழை நீரை வெளியேற்ற வழிவகை செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.