”பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் 300 நிர்வாக அலுவலர் (பொது) பணியிடங்களை நிரப்பவுள்ளது. இதற்கான அறிவிக்கையை கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அன்று வெளியிட்டது.  இரண்டு கட்டங்களாக இந்த தேர்வு நடைபெறும் எனவும் முதல் கட்டத்தேர்வு அக்டோபர் 16ஆம் தேதியன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பித்துள்ள ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி தேர்வர்களுக்கு தேர்வுக்கு  முன்பாக பயிற்சி தரப்படும். முக்கியமான மையங்களில் இந்த வகுப்புகள் நடைபெறும். இந்த முறை ஆன்லைனில் இதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், 



மிகவும் ஆர்வத்தோடு தமிழ்நாட்டில் விண்ணப்பித்திருந்த தேர்வர்கள் இதில் பங்கேற்றனர். முதல் நாளிலேயே இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தி வழியில்தான் பயிற்சி தரத் துவங்கினர். அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கிய இந்தப் பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்தியில்தான் வகுப்புகள் நடக்கின்றன. இது விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களுக்கு எந்தவித பலனையும் தருவதாக இல்லை என தெரிவித்துள்ளார்.



இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

 

இதில் கொடுமை என்னவென்றால், ஆங்கில மொழித்தாளுக்கான பயிற்சி வகுப்பையும் அவர்கள் இந்தியில்தான் நடத்தியிருக்கிறார்கள். ஆகவே, தேர்வுக்கு முன்பாக, ஒரு குறுகிய காலப் பயிற்சி ஒன்றை தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு ஏற்பாடு செய்திட வேண்டும். அதோடு, தேர்வர்களுக்குப் புரியும் மொழியில் நடத்திட வேண்டும் என்றும், வரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நேராவண்ணம் உறுதி செய்திட வேண்டும்” என்று அக்கடிதத்தில் கோரியுள்ளதாக சு.வெங்கடேசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



 

”மதுரை எம்.பியும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் அவர்கள் ரயில்வே துறை, அஞ்சல் துறை என மத்திய அரசு சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருவது குறிப்பிடத்தகக்து.