வட்டார கல்வி அலுவலர் அதிகாரி மீது மூன்று பெண் தலைமை ஆசிரியர்கள் பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கல்வி மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் வேடசந்தூர் குஜிலியம்பாறை வடமதுரை ரெட்டியார்சத்திரம் ஆகிய நான்கு ஒன்றியத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட நாகக்கோணலூர்.பூதிபுரம். கருக்கம்பட்டி. ஆகிய மூன்று பள்ளிகளில் பணி செய்துவரும் தலைமை ஆசிரியைகளாக பணி செய்து வருபவர்கள் வட்டார கல்வி அலுவலர் பா.அருண்குமார் என்ற அதிகாரி மீது பாலியல் புகாரினை வேடசந்தூர் கல்வி மாவட்ட அதிகாரியிடமும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமும் புகார் கொடுத்துள்ளார்கள்

 

அந்த புகாரில் இதில் ஒரு தலைமை ஆசிரியையிடம் சக ஆசிரியர்களை அண்ணா என்று உறவு முறை வைத்து அழைக்கிறாய் அவர்கள் எனக்கு மைத்துனர்கள் அப்போ நான் உங்களுக்கு என்ன வேண்டும் என்றும், அதே நேரத்தில் அந்தப் பெண் தலைமை ஆசிரியர் தோழியையும் அவரது கணவரை பற்றியும் தொடர்புப்படுத்தி தவறான பார்வையில் பேசப்பட்டு வருவதாகவும் மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்க வரும்போதெல்லாம் தவறான பார்வையில் பார்த்து வருவதாக ஒரு புகாரும், மற்றொரு தலைமை ஆசிரயையிடம் இரட்டை அர்த்தத்துடன் கணவர் இறந்து தனியாக எப்படி இருக்கிறீர்கள் எனக்கூறி மனதை புண்படும்படி பேசுவதாகவும், மற்றொரு தலைமை ஆசிரியை மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்க அலுவலகம் சென்றபோது இருக்கையில் அமரச் சொல்லி டீச்சர்  நீங்கள்ளாம் எனக்கு எட்டாக்கனியாக இருக்கிறீர்கள்  என்று வர்ணித்தும் எழுத்தில் சொல்லமுடியாத நாகரீகற்ற முறையில் நடந்துகொண்டதாகவும் மோசமான படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வருவதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருவதாக வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளனர்

 

வட்டார கல்வி அலுவலர் மீதான புகார் குறித்து வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவரிடம் கேட்டபோது மூன்று பெண்கள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி ஆணும் அவர் மீது புகார் கொடுத்துள்ளார்கள். இது சம்பந்தமான விசாரணைகள் நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் விசாரணையை முடித்து முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு புகார் பற்றிய விளக்கம் சமர்ப்பிக்கப்படும் தொடர்ந்து துறை ரீதியான உண்மைத்தன்மை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் மாணவ மாணவிகளுக்கு கல்வியை கற்பிக்கும் பள்ளிகல்வி துறையிலேயே  இது போன்ற குற்றச்செயல்கள் நடைபெற்று வருவது சமுக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  இதேபோல் கடந்த 2018-ஆம் ஆண்டு கல்வித்துறைக்கு எதிராக செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, உண்மை என தெரியவந்ததை தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் அருண்குமார்யை முதன்மை கல்வி அலுவலர் பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது