சேவை ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன பல்வேறு ரயில்களின் புறப்படும் நேரம் ஜனவரி 1 முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

 


ஜனவரி 1 முதல் ரயில் கால அட்டவணை மாற்றம் 

 

மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா நோய் தொற்றிற்கு பிறகு சிறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்ட குறைந்த தூர ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வந்தன. தற்போது இவை அனைத்தும் வழக்கமான சேவை ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன பல்வேறு ரயில்களின் புறப்படும் நேரம் ஜனவரி 1 முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

 

எந்த ரயில் அதன் விபரம்


 

அதன்படி மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் (16344) மதுரையில் இருந்து மாலை 16.10 மணிக்கு பதிலாக மாலை 15.45 மணிக்கும்,  தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும். மதுரை - சென்னை மும்முறை சேவை விரைவு ரயில் (22624) மதுரையில் இருந்து இரவு 08.50 மணிக்கு பதிலாக இரவு 08.45 மணிக்கும்,  மதுரை - புனலூர் விரைவு ரயில் (16729) மதுரையில் இருந்து இரவு 11.25 மணிக்கு பதிலாக இரவு 11.20 மணிக்கும் புறப்படும். அதேபோல திருநெல்வேலி - செங்கோட்டை ரயில் (56741) திருநெல்வேலி லிருந்து காலை 07.00 மணிக்கு பதிலாக காலை 06.50 மணிக்கும், திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் (56708) திருநெல்வேலியில் இருந்து காலை 07.10 மணிக்கு பதிலாக காலை 07.05 மணிக்கும், திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் (56727) திருநெல்வேலியில் இருந்து காலை 07.25 மணிக்கு பதிலாக காலை 07.15 மணிக்கும், திருநெல்வேலி - செங்கோட்டை ரயில் (56743) திருநெல்வேலியில் இருந்து மதியம் 01.50 மணிக்கு பதிலாக மதியம் 01.45 மணிக்கும் புறப்படும். செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848) செங்கோட்டையிலிருந்து காலை 07.05 மணிக்கு பதிலாக காலை 06.55 மணிக்கும், செங்கோட்டை - திருநெல்வேலி ரயில் (56738) செங்கோட்டையில் இருந்து மதியம் 02.35 மணிக்கு பதிலாக மதியம் 02.05 மணிக்கும் புறப்படும்.

 

தூத்துக்குடி - திருநெல்வேலி ரயில் (56721) தூத்துக்குடியில் இருந்து மாலை 06.25 மணிக்கு பதிலாக மாலை 06.15 மணிக்கு புறப்படும். திருச்செந்தூர் - திருநெல்வேலி ரயில் (56728) திருச்செந்தூரிலிருந்து காலை 07.20 மணிக்கு பதிலாக காலை 07.10 மணிக்கு புறப்படும். மணியாச்சி - தூத்துக்குடி ரயில் (56726) மணியாச்சியிலிருந்து மாலை 03.10 மணிக்கு பதிலாக மாலை 03.00 மணிக்கும், மணியாச்சி -  திருச்செந்தூர் ரயில் (56731) மணியாச்சியிலிருந்து காலை 11.05 மணிக்கு பதிலாக காலை 11.00 மணிக்கும், மணியாச்சி - தூத்துக்குடி ரயில் (56724) மணியாச்சியிலிருந்து இரவு 08.25 மணிக்கு பதிலாக இரவு 08.15 மணிக்கும் புறப்படும். காரைக்குடி - திருச்சி ரயில் (56816) காரைக்குடியில் இருந்து மாலை 03.30 மணிக்கு பதிலாக மாலை 03.15 மணிக்கு புறப்படும். வழக்கமான நேரத்திற்கு முன்னதாக புறப்படும் ரயில்களில் விபரம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில ரயில்கள் வழக்கமான நேரத்திற்கு பிறகு புறப்படும் படியாகவும் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

 

பயண நேரம் குறைப்பு 


 

தாதர் - திருநெல்வேலி ரயில் (11021), சென்னை - திருநெல்வேலி நெல்லை ரயில் (12631), நாகர்கோவில் - சென்னை ரயில் (12668), சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் ரயில் (12689), சென்னை - குருவாயூர் ரயில் (16127), கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் ரயில் (16618), ஈரோடு - செங்கோட்டை ரயில் (16845), மாயவரம் - செங்கோட்டை ரயில் (16847), பெரோஸ்பூர் - ராமேஸ்வரம் ரயில் (20498), திருச்செந்தூர் - சென்னை செந்தூர் ரயில் (20606), ராமேஸ்வரம் - புவனேஸ்வர் ரயில் (20895), நாகர்கோவில் தாம்பரம் ரயில் (22658) ஆகியவற்றின் பயண நேரம் முறையே 40, 30, 40, 35, 35, 30, 40, 35, 30, 30, 30, 40 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் 57 விரைவு  ரயில்களின் பயண நேரம் 05 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை குறைக்கப்பட்டுள்ளது.