பனிப்பொழிவின் காரணமாக வரத்து பெருமளவு குறைந்துள்ளதால் இந்த விலையேற்றம் உள்ளது. அடுத்த ஓரிரண்டு நாட்கள் இதே விலை நீடிக்க வாய்ப்பு புத்தாண்டு காரணமாக பூக்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்
தென்மாவட்டங்களில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் மிக முக்கியமானவை. இந்த மார்க்கெட்டுக்கு மல்லிகைப் பூக்கள் வரத்துக் குறைந்ததால் அதன் விலை முகூர்த்தம் மற்றும் விழாக்கள் இல்லாத நாட்களில் கூட அதிகமாக இருக்கும். அதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், வடமதுரை, சாணார்பட்டி, நத்தம், தொப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் நடைபெறும் மலர்கள் அனைத்தும் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள மலர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்
மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய (31.12.202) விலை நிலவரம்:
மதுரை மல்லி கிலோ ரூ.2,800, மெட்ராஸ் மல்லி கிலோ ரூ.1,000, பிச்சி கிலோ ரூ.1,300, முல்லைப் பூ கிலோ ரூ.1,200, செவ்வந்தி பூ கிலோ ரூ.160, சம்பங்கி பூ கிலோ ரூ.280, செண்டு மல்லிப் பூ கிலோ ரூ.100, கனகாம்பரம் பூ கிலோ ரூ.1,500, ரோஸ் ரூ.280, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.350, கோழிக்கொண்டை பூ ரூ.100, அரளி ரூ.450, தாமரை (ஒன்றுக்கு) ரூ.25 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பனிப்பொழிவின் காரணமாக வரத்து பெருமளவு குறைந்துள்ளதால் இந்த விலையேற்றம் உள்ளது. அடுத்த ஓரிரண்டு நாட்கள் இதே விலை நீடிக்க வாய்ப்பு புத்தாண்டு காரணமாக பூக்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என, மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?