தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்’ என்று பிரகடனப்படுத்தி வாழ்ந்த தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். இது போன்று மேலும் பல்வேறு சிறப்புகளுக்குரிய உன்னதத் தலைவரின் 115-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.


 




இந்நிலையில் நாளை தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, மதுரை மாநகரில்  போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  லாரிகள் மற்றும் கனகர வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 10.30மணி வரை நகருக்குள் கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி நுழைய தடை செய்யப்படுகிறது. விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில் செல்வதற்கு அனுமதி இல்லை.





நத்தம் ரோடு, அழகர் கோவில் ரோடு ஆகிய பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பாண்டியன் ஹோட்டல் சந்திப்பில் திரும்பி மாற்று பாதையாக கக்கான் சிலை, ராஜா முத்தையா மன்றம், K.K.நகர், ஆவின் சந்திப்பு, அண்ணாநகர் மெயின் ரோடு. PTR பாலம், காமராஜர் சாலை வழியாக செல்ல வேண்டும். மாட்டுத்தாவணி,ஆவின் சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து நத்தம் ரோட்டிற்கு வரும் வாகனங்கள், ராஜாமுத்தையா மன்றம், Out Post,பாண்டியன் ஹோட்டல், தாமரைத்தொட்டி, புது நத்தம் ரோடு வழியாக செல்ல வேண்டும்.

 

வடக்கு வெளிவீதியிலிருந்து யானைக்கல், புதுப்பாலம் பாலம் ஸ்டேசன் ரோடு, M.Mலாட்ஜ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கான்சாபுரம் ரோடு, E2E2சாலை, அரசன் ஸ்வீட்ஸ், பெரியார் மாளிகை வழியாக செல்லவேண்டும். மேலமடை பகுதியிலிருந்து கோரிப்பாளையம் நோக்கி நகருக்குள் வரும் வாகனங்கள் ஆவின் சந்திப்பிலிருந்து குருவிக்காரன் சாலை வழியாக நகருக்குள் செல்ல வேண்டும்.



தேவர் ஜெயந்தி விழாவிற்காக பசும்பொன் செல்லக்கூடிய பிற மாவட்ட வாகனங்கள் நகருக்குள் செல்ல காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர, இதர வாகனங்கள் நகருக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாகச் செல்ல வேண்டும். எனவே,30.10.2022-ந்தேதி தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு, வியாபாரபெருமக்கள், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்களின் நலன்கருதி இதில் குறிப்பிட்டுள்ள மாற்றுப் பாதைகளை தற்காலிகமாக பயன்படுத்துமாறு காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.