பண்டிகை தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவியும் சுற்றுலா ப‌யணிகளால், நகர் பகுதிகளில் சுமார் 5 கிமீ தூரம் வரை சாலையின் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து  சுற்றுலா வாகனங்கள் சென்றன.




பிரபலமான சுற்றுலா தலம்:


மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.


ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?


அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை:


பல்வேறு பண்டிகை தினங்கள் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு. குறிப்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள். தற்போது தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக அளவில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்திருக்கின்றனர்.  தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையை  முன்னிட்டு காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் வருகையானது அதிகரித்து காணப்பட்டது.




குறிப்பாக பிரதான மலைச்சாலைகளில் சுற்றுலா பயணிகளின் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சுமார் 5 கிலோ மீட்டருக்கு மேலாக சாலையில் வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது .  அப்சர்வேட்டரி சாலை, ஏரி சாலை, நாயுடுபுரம் சாலை , சென்பகனூர் சாலை , வத்தலகுண்டு பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து பல மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மலைப்பகுதியில் நிலவும் மிதமான வெப்பத்துடன் கூடிய இதமான கால நிலையை அனுபவித்தும் மகிழ்ந்து வருகின்றனர், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதலாக காவலர்கள் இல்லாமல் இருப்பதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.


மீண்டும் என்கவுண்டர்.. இரண்டு பயங்கரவாதிகள் அவுட்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ராணுவம்!




மேலும் தங்கும் விடுதிகளும் கொடைக்கானல் முழுவதிலும் தங்கும் விடுதிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் தங்கும் அறைகள் கிடைக்காமல் பெரும் அவதி அடைந்துள்ளனர் . தொடர்ந்து உணவு விடுதிகளிலும் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். தொடந்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.