மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வார விடுமுறை நாளான இன்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் காணப்பட்டது.
மர்மமாக உயிரிழந்த நெல்லை காங்கிரஸ் தலைவர் உடல் நல்லடக்கம் - தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி
குவியும் மக்கள்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்றைய தினம் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்ததின் காரணமாக வெப்பதின் தாக்கம் சற்று குறைந்து இதமான காலநிலை நிலவி வருகிறது. இதை அனுபவிப்பதற்காக கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ள சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த காலநிலையை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக மோயர் சதுக்கம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
Cooku With Comali 5: குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நாஞ்சில் விஜயன் விலகல் - என்ன காரணம்?
மேலும் திடீரென தரையில் இறங்கிய மேகக் கூட்டங்களை கண்டு உற்சாகம் அடைந்த சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மேக கூட்டத்தை ரசித்து சென்றனர். அதேபோன்று பைன் மரக்காடுகள் குணா குகை, தூண் பறை, பசுமை பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணி கூட்டம் அலைமோதியது மேலும் ரோஜா தோட்டம் மற்றும் பிரைன் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்களை கண்டு ரசித்து உற்சாகமடைந்து வருகின்றனர்.
மேலும் நகரின் மையப் பகுதியில் இருக்கக்கூடிய நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் ஏரியை சுற்றி குதிரை சவாரி சைக்கிள் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடந்து வருகின்றனர்.மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் காலை முதலே வெப்பத்தின் தாக்கம் குறைந்து மேகமூட்டமாக காட்சி அளித்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க கும்பக்கரை அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள். மிகவும் குறைந்த அளவில் நீர் வந்தாலும் காத்திருந்து குளித்துச் செல்லும் சுற்றுலா பகுதிகள்.
Fact Check: காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தாரா நடிகர் அல்லு அர்ஜுன்? வைரலாகும் வீடியோ உண்மையா?
கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைவு:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக முற்றிலும் மழைப்பொழிவு இல்லாத நிலையில் அருவிக்கு முற்றிலும் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.இந்த நிலையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் முற்றிலும் குறைந்த அளவு வரும் நீரில் பல மணி நேரம் காத்திருந்து குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள போதும் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க சுற்றுலாப் பயணிகள் காத்திருந்து குளித்து செல்கின்றனர்.