Bajaj CNG Bike: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நாட்டின் முதல் சிஎன்ஜி பைக்கை, வரும் ஜுன் 18ம் தேதி பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
நாட்டின் முதல் சிஎன்ஜி பைக்:
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவின் முதல் CNG மோட்டார்சைக்கிளை, வரும் ஜூன் மாதம் 18ம் தேதி அன்று அறிமுகப்படுத்துகிறது. பல்சர் NS400Z வெளியீட்டு நிகழ்வின் போது, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் இதனை உறுதிப்படுத்தினார். இரு சக்கர வாகன உற்பத்தியாளர் புதிய CNG பைக் மூலம், எண்ட்ரி லெவல் மோட்டார் சைக்கிள் சந்தையில் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளார். இரு எரிபொருள் மோட்டார் சைக்கிள்கள், பிரீமியம் விலையில், Hero MotoCorp இன் ஆதிக்கத்திற்கு சவால் விடும். பஜாஜ் தற்போது 8% பங்கைக் கொண்டுள்ள மைலேஜிற்கு முக்கியத்துவம் அளிக்கும், எண்ட்ரி லெவல் பிரிவில் கோலோச்சுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இரட்டை எரிபொருள் வாகனம்:
பஜாஜ் முற்றிலும் புதிய பிராண்டின் கீழ் புதிய சிஎன்ஜி பைக்கை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி புதிய பைக்கானது சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டிலும் இயங்கக்கூடியவை என கூறப்படுகிறது. எரிபொருள் விலை உயர்வுக்கு மத்தியில் இருசக்கர வாகனம், வாங்குபவர்களின் கவனம் அதிகமாக இருக்கும், சந்தையின் எண்ட்ரி லெவல் (125சிசி மற்றும் அதற்கும் குறைவானது) பெட்ரோல் வாகனத்துடன் ஒப்பிடும்போது பிரீமியம் விலை நிர்ணயம் செய்யப்படும் என பஜாஜ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஎன்ஜி பைக்கின் வடிவமைப்பு:
மோட்டார் சைக்கிள் பற்றிய குறிப்பிட்ட தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் அண்மைக் காலங்களாக இது பல முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சமீபத்தில் வெளியான சோதனை புகைப்படங்கள் மூலம் புதிய வாகனமானது, ஆலசன் டர்ன் சிக்னல்கள், டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள் மற்றும் சஸ்பென்ஷனுக்கான மோனோஷாக் ஆகியவற்றைக் கொண்ட நிலையான கம்யூட்டர் மோட்டார்சைக்கிளாக காட்சியளிக்கிறது.
மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களாக பல ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள், நீளமான ஒற்றை-துண்டு இருக்கை, பிரேக்கிங் சிஸ்டம் டிஸ்க் மற்றும் டிரம் ஆகியவற்றின் கலவையாகும். அதன் தோற்றத்தின் அடிப்படையில், எண்ட்ரி லெவல் பிரிவுகளுக்கான பட்ஜெட் வரம்பில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாகனத்தின் பெயர் என்ன?
நிறுவனம் சமீபத்தில் கிளைடர், மராத்தான், ட்ரெக்கர் மற்றும் ஃப்ரீடம் போன்ற பெயர்களுக்கான வர்த்தக முத்திரை விண்ணப்பங்களை ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9 வரை சமர்ப்பித்தது. இந்த பெயர்களில் ஏதேனும் ஒன்று, புதிய சிஎன்ஜி பைக்கிறிகு சூட்டப்படலாம். இன்ஜின் விவரக்குறிப்புகள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. பஜாஜ் ஏற்கனவே உள்ள பெட்ரோல் இன்ஜினை மாற்ற அல்லது சிஎன்ஜி பயன்பாட்டிற்காக முற்றிலும் புதிய பவர்டிரெய்னை உருவாக்கலாம். செயல்திறன் விவரங்கள் வெளியீட்டு தேதிக்கு அருகில் வெளிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI