1. தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
2. தூத்துக்குடியில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
3. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேலப்பசலை கண்மாயிலிருந்து கள்ளிக்குடி, புத்தூர், சோமாத்தூர், கரிசல்குளம் கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு மேலப்பசலை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து கண்மாயிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டது.
4.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டு காரில் தப்ப முயற்சித்த கேரள திருட்டு கும்பலை போலீசார் விரட்டிப்பிடித்தனர்.
5.சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூர் அருகே விரி சுழியாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் உடையாகுளம் கிராம மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
6. விருதுநகர் மாவட்டம் சிவகாசி கல்லூரி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பேராசிரியை ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
7. மதுரை விமான நிலையத்தில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கார் விபத்து ஏற்பட்டது. காரின் முன்பகுதி விபத்து சேதம் அடைந்ததால் மக்கள் தொடர்பு அதிகாரி கார் மூலம் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கிளம்பிச் சென்றார். இதனால் மதுரை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
8. ஒமைக்ரான் பாதிப்பிற்கு அச்சம் வேண்டாம் அரசு சொல்லும் விதிமுறைகளை கடைபிடித்தால் போதும், ஊரடங்கு அவசியம் இல்லை - அமைச்சர் சுப்ரமணியன் மதுரையில் பேட்டி அளித்தார்.
9. தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
10. மதுரை அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் கூடிய ஒமைக்ரான் வார்டு தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!