1. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்றதாகக் கூறி வாகன ஓட்டுநர்கள், பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
2. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வாடகை பாக்கியை தராத 9 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இதைக் கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.
3. சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்மணி பாஸ்கரன் நேற்று தனது சொந்த ஊரான எஸ்.புதூர் அருகே பொன்னடப்பட்டியில் இருந்து சிவகங்கைக்கு காரில் சென்றார். காயாம்பட்டி அருகே சென்றபோது, கார் ஒன்று விபத்துக்குள்ளாகி சாலையோரத்தில் தலைகீழாக கவிழ்ந்து கிடந்தது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய பொன்மணி பாஸ்கரன் உள்ளிட்டோர், விபத்துக்குள்ளான காரை பார்த்தபோது, அதனுள் காயமடைந்த 2 பேர் மயங்கிக் கிடந்தனர். அவர்களை மீட்க முயன்றபோது கார் கதவை திறக்க முடியவில்லை.
4. ஓமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக-கேரள எல்லையில் கண்காணிக்க தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
5.அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தேனி மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு.
6. ராமநாதபுரம் பகுதியில் தொடர்மழையால் நெற்பயிர், மிளகாய்செடிகள் நீரில் மூழ்கியுள்ளது. விதைப்பு, உரமிடுதல், களையெடுப்பு என செலவு செய்து பலஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
7. பொதுமக்கள் நலன் கருதி கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் இனி வரும் காலங்களில் சந்தைகள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
8. மதுரை பைபாஸ் ரோடு சுப்பிரமணியம் பிள்ளை தெரு அருகே ரோட்டை ஆக்கிரமித்து வைத்திருந்த பலுான் கடையில் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட வில்லை.
9. உடன்குடி தேரிகுடியிருப்பு கள்ளர் வெட்டு திருவிழா வரும் 14 ஆம் தேதி துவங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளர் என்னும் இளநீர் வெட்டும் திருவிழா 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.
10. ராமநாதபுரத்தில் ஷேக் முகமது 30, என்பவரால் காதலித்து ஏமாற்றப்பட்ட 25 வயது பெண் தற் கொலை செய்தார். அவரது கடிதத்தில் இது 'லவ் ஜிகாத்' டுள்ளார்.