1. தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒரு நபர் ஆணையத்தின் 33 வது கட்ட விசாரணை ஆணையம் முன்பாக இன்று தூத்துக்குடி முன்னாள் ஆட்சியர் சந்தீப் நந்தூரி, முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி ஜோஷி நிர்மல்குமார், உள்ளிட்ட நால்வர் ஆஜராக உள்ளனர்.
2. ராமநாதபுரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 78 வங்கிகள் மூடப்பட்டன. இதனால் வங்கி பண பரிவர்த்தணைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
3. யூடியூபர் மாரிதாசை டிசம்பர் -30 வரை சிறையில் அடைக்க நெல்லை நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
4.திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே பாச்சலூரில் பள்ளி மாணவி தீக்காயம் ஏற்பட்டு பலியானது குறித்து டி.ஜ.ஜி விஜயகுமாரி விசாரணை செய்தார்.
5. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - இருவரையும் காவல்நிலையத்தில் அடித்து துன்புறுத்தியதோடு, உயிரழந்த பின்னர் ஆவணங்களை மாற்றியதாகவும் சிறப்பு சார்பு ஆய்வாளர் சாட்சியம் - டிசம்பர் 21- ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு.
6. மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் அவரது நியமனம் செல்லாது. என அறிவிக்க கோரிய வழக்கு, கல்லூரி கல்வி இயக்குநர், யூஜிசி உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
7.தாமிரபரணி ஆற்றில் மணல் திருடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மண் சாலையை அகற்றக் கோரிய வழக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
8. இலங்கை சிறையில் உள்ள தமிழரை , இந்திய சிறைக்கு மாற்ற கோரிய வழக்கு, ஜனவரி மாதம் இந்திய சிறைக்கு மாற்றப்படும் என இலங்கை தூதரகம் மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் நிலை அறிக்கையை ஜனவரி 20 ம் தேதி தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
9.தமிழக திமுக அரசை கண்டித்து தேனி பங்களா மேட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
10.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு...!