திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, செம்பட்டி, அய்யலூர், ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடியாகும் தக்காளி திண்டுக்கல்லில் உள்ள காந்தி மார்க்கெட்டுக்கும், உழவர் சந்தைக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதில் காந்தி மார்க்கெட்டில் மொத்தமாகவும், சில்லரையாகவும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் நகர் பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் வியாபாரிகளில் பெரும்பாலானோர் காந்தி மார்க்கெட்டில் இருந்து தான் காய்கறிகளை வாங்கிச்சென்று பொதுமக்களுக்கு விற்கின்றனர். கடந்த மார்ச் மாதம் வரை காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை ஆகி வந்தது. இந்த நிலையில் கடும் வெயில், கோடை மழை காரணமாக தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டது.


Rajiv Gandhi death anniversary: ரயில் டிக்கெட்டுக்கு கணினி! மூலைமுடுக்கெல்லாம் PCO! ராஜீவ்காந்தி செய்த சூப்பர் சம்பவங்கள்!




இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைய தொடங்கியது. இதையடுத்து ஆந்திரா, ஓசூர் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு தக்காளி விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. இதனால் காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை உயரத்தொடங்கியது. தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.85 முதல் ரூ.90 வரை விற்பனை ஆகிறது. இதுகுறித்து காந்திமார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில் உள்ளூர் வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. ஆனாலும் எங்களுக்கு வருமானம் கூடுதலாக கிடைக்கவில்லை. ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்கப்பட்டபோது கிடைத்த வருமானமே தற்போதும் கிடைக்கிறது.


NASA: இது பிரபஞ்சத்தின் விசித்திரம்..எல்லாமே மர்மம்.. புதிய கண்டுபிடிப்பால் ஷாக்கான நாசா!




அதேபோல் விவசாயிகளுக்கும் சாகுபடி செலவை ஒப்பிட்டால் தற்போது கிடைக்கும் விலை கட்டுப்படியாகாது என்கிறார்கள். அதேபோல தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மாவட்டமாக தேனி மாவட்டம் உள்ளது. இங்கு அதிகப்படியாக விவசாயம் சார்ந்த தொழிலே செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை சீசன் தாக்கத்தால் தக்காளி விளைச்சல் குறைந்து உள்ளது. ஆதலால் அருகில் உள்ள கேரளாவிற்கும் தக்காளி ஏற்றுமதி குறைந்துள்ளது.


அதற்கான காரணமாக விவசாயிகள் கூறுகையில் தக்காளி வரத்து குறைந்ததே விற்பனைக்காக சந்தைகளுக்கு வருவதும் குறைவே இந்த சூழ்நிலையில்தான் தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோவிற்கு ருபாய் 70 முதல் 85 ருபாய் வரையில் விற்பனையாகி வருகிறது என்கிறார்கள் வியாபாரிகளும் விவசாயிகளும்.


Omicron BA 4: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா! அமைச்சர் சொன்ன புதுத்தகவல்!!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண