மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதிக்கு செல்லும் வழியில் கொடைரோடு சுங்கச்சாவடி உள்ளது.


Senthil Balaji: ஜாமின் கேட்ட செந்தில் பாலாஜி.. நீதிபதி பிறப்பித்த உத்தரவு என்ன தெரியுமா..?




தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதில் கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களுக்கும், இலகுரக வாகனங்களுக்கும் ஒருமுறை, பலமுறை பயன்பாட்டிற்கான கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பலமுறை பயன்பாட்டிற்கான மாதாந்திர கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை  வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. கொடைரோடு சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்ட கட்டண விவரம் வருமாறு ,


Rahul Gandhi: ”மோடி பொய் சொல்கிறார்.. லடாக்கில் சீனா அத்துமீறியது எல்லோருக்கும் தெரியும்” - ராகுல் காந்தி ஆவேசம்




Joju George: நடிகர் ஜோஜூ ஜார்ஜிடம் லண்டன் கொள்ளையர்கள் கைவரிசை... பாஸ்போர்ட், ரூ.15 லட்சம் திருட்டு.. என்ன நடந்தது?


கார், வேன், ஜீப் பல முறை பயன்பாட்டிற்கு மாதாந்திர கட்டணம் ரூ.2,250. இலகுரக வாகனங்கள் பல முறை பயன்பாட்டிற்கு மாதாந்திர கட்டணம் ரூ.3,935 என உயர்த்தப்பட்டுள்ளது.  மேலும் பஸ், டிரக் ஒரு நாளில் பல முறை பயன்பாட்டிற்கு ரூ.395, பல முறை பயன்பாட்டிற்கு மாதாந்திர கட்டணம் ரூ.7,870, பல அச்சு கொண்ட வாகனம் ஒரு முறை பயன்பாட்டிற்கு ரூ.420, ஒரு நாளில் பல முறை பயன்பாட்டிற்கு ரூ.630, பல முறை பயன்பாட்டிற்கு மாதாந்திர கட்டணம் ரூ.12,650 என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டுனர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.