தமிழக, கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் நீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம்.
Latest Gold Silver Rate: குறைந்த தங்கம் விலை.. ஆனா இவ்ளோதானா? இன்றைய நிலவரம் இதுதான்..!
இந்த நிலையில் இந்த மாதம் ஆரம்பத்திலிருந்தே அணையின் நீர் மட்டமானது உயரத்தொடங்கியது. முல்லை பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழையால் அணையின் நீர் மட்டமானது தற்போது 135.85 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3617 கன அடியாக இருந்தது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 700 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரித்துள்ளது.
அதே போல் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் சில தினங்களாக மாவட்டத்தில் பெய்த மழையால் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சோத்துப்பாறை, மஞ்சளாறு, வைகை அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தற்பொழுது அணையில் நீர் இருப்பு அணையின் முழு கொள்ளளவான 71 அடியில் 67.32 அடியாக உள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து 4583 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து நீர் திறப்பு 5899 கன அடியாக உள்ளது.
தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு நிலவரம் :
ஆண்டிபட்டி : 0 மிமி , அரண்மனைப்புதூர் :18.0, வீரபாண்டி : 12.0 ,பெரியகுளம் :18..0 ,மஞ்சலாறு : 3.0 ,சோத்துப்பாறை : 26.0 , வைகை அணை : 14.0 , போடி நாயக்கனூர் : 3.2 , உத்தமபாளையம் : 2.4, கூடலூர் : 3.6 , பெரியார் அணை : 5.8 , தேக்கடி : 11.4 , சண்முகா நதி அணை : 9.12
தேனி மாவட்டத்தில் மற்ற அணைகளின் இன்றைய நிலவரம்.
வைகை அணை
நிலை- 67.32 (71)அடி
கொள்ளளவு: 6068Mcft
நீர்வரத்து: 4583கனஅடி
வெளியேற்றம் : 5899குசெக்வெசிட்டி
மஞ்சலார் அணை:
நிலை-55.00(57) அடி
கொள்ளளவு:435.32Mcft
வரத்து: 100கனஅடி
வெளியேற்றம்:100கியூசெக்
சோத்துப்பாறை அணை:
நிலை- 126.93 (126.28) அடி
கொள்ளளவு: 100Mcft
நீர்வரத்து:527.07கனஅடி
வெளியேற்றம்:521.07 கனஅடி
சண்முகநதி அணை:
நிலை-52.50(52.55)அடி
கொள்ளளவு:79.57 Mcft
வரத்து: 9 கனஅடி
வெளியேற்றம்: 0 கியூசெக்.