சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் நான்கு மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இதில் கலியாந்தூர் செல்லும் பாதையில் இரண்டு மதுக்கடைகள் உள்ளன. அதன் அருகில் பார் இல்லாத காரணத்தினால் சிறு கடைகளை பாராக இயங்கி வருகிறது. அங்கு மது அருந்த தன்னுடைய இரண்டு குழந்தைகளை அழைத்துச் சென்று மதுபானம் வாங்கி அதன் அருகிலேயே குடித்துவிட்டு தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அங்கேயே விட்டுச் சென்று விட்டார்.

 



இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

 

அந்த குழந்தையின் தாயார் மற்றும் உறவினர்கள் குழந்தையை காணவில்லை என்று திருப்புவனம் நகர் முழுவதும் இரண்டு மணி நேரமாக தேடிவந்தனர் அப்பொழுது குழந்தைகளின் தாயார் கதறி அழுத காட்சி அங்கு இருந்தோரை மனம் இளகச் செய்தது. பின்பு காவல் துறையில் புகார் அளிக்கச் சென்றனர். அப்போது, குழந்தைகள் மதுக்கடை அருகில் உள்ள கடையில் இருப்பதாக தகவல் கிடைத்தவுடன் உறவினர்கள் சென்று குழந்தையை மீட்டனர். மதுக்கடை அருகே பார் நடப்பதை மதுக்கடை ஊழியர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.




மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு...!

இது குறித்து மானாமதுரை பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர்..,” டாஸ்மாக் கடைகளால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறது. அ.தி.மு.க - தி.மு.க என எந்த அரசு ஆட்சிக்கு வந்தாளும் மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க முழு முயற்சி எடுப்பதில்லை. இது சமூகத்தில் மிகப்பெரும் நோயாக உள்ளது. இந்நிலையில் திருப்புவனம் பகுதியில் மது குடிக்க தந்தை பெற்ற குழந்தைகளை அழைத்துச் சென்றது மிகப்பெரும் தவறு. அதையும் தாண்டி மது மயக்கத்தில் குழந்தைகளை மது அருந்திய இடத்திலேயே விட்டுச்சென்றுள்ளார். இது வேதனையை ஏற்படுத்துகிறது. எனவே அவர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக தெரிவித்தனர்.