திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் அழகர்சாமி. இவரது மகன் அஜித்குமார் 23 வயதான இவர் தனியார் குடிநீர் கேன் வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தாடிக்கொம்பு அடுத்துள்ள கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாணவி திண்டுக்கல்லில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், இரண்டு நாளைக்கு முன் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார். அப்போது அஜீத் குமாருடன் அந்த மாணவிக்கு இருந்த தொடர்பு பற்றி தெரியவந்துள்ளது. இதனிடையே மாணவிக்கு அஜித்குமார் பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அஜித் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வனராஜ் 25 வயதான இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை முகநூலில் அறிமுகமாகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டிலிருந்து வெளியேறி தேனிக்கு வந்துள்ளார். அவரை வனராஜ் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்கவும் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆண்டிபட்டி மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் பேரில் வனராஜ் மீது போலீசார் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் வனராஜ்ப்க்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை செல்வராஜ் தாயார் மகேஸ்வரி ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
அதேபோல தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் அதே கல்லூரியில் பயின்று வரும் சின்னமனூர் அருகே உசிலம்பட்டியை சேர்ந்த குமார் மகன் ஹரி ஹரன் 19 வயதான இவருக்கும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹரிகரன் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி கொடைக்கானல், போடி பரமசிவன் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பின்னர் அம்மாணவி ஹரிஹரன் வீட்டுக்கு சென்று திருமணம் செய்ய வலியுறுத்திய போது அவரது தாயார் பாரதி , சித்தி பாண்டியம்மாள் ஆகியோர் ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக அம்மாணவி போடி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து ஹரிஹரன் மற்றும் பாரதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -Madurai Chithirai Festival : மீனாட்சி திருக்கல்யாணம் : நேரிலும், ஆன்லைனிலும் டிக்கெட்டுகள் பெறுவது எப்படி?