பெரியகுளம் அருகே கோர விபத்து! கார்-வேன் நேருக்கு நேர் மோதல்! கேரளாவை சேர்ந்த 3 பேர் பலி

ஏற்காடு சுற்றுலா சென்ற வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கேரள மாநிலம் கோட்டயத்தை  சேர்ந்த மூன்று பேர் சம்பவ இத்திலேயே உயிரிழப்பு.

Continues below advertisement

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேனி மாவட்ட எல்லையில், ஏற்காடு சுற்றுலா சென்ற வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கேரள மாநிலம் கோட்டயத்தை  சேர்ந்த மூன்று பேர் சம்பவ இத்திலேயே உயிரிழப்பு.

Continues below advertisement

18 நபர்கள்  படுகாயங்களுடன் வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?


சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேனி மாவட்ட எல்லை பகுதியான காட்ரோடு பகுதியில், தேனி நோக்கி சென்ற கேரள மாநில காரும், தேனியில் இருந்து ஏற்காடு நோக்கி சென்ற சுற்றுலா வேனும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில்,  வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த நான்கு நபர்களில் மூன்று நபர்கள் அப்பளம் போல் நொறுங்கி காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!


மேலும் ஒருவர் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் ஏற்காடு நோக்கி சுற்றுலா சென்ற சுற்றுலா வேனில் பயணித்த 18,நபர்கள் பலத்த  காயங்களுடன் வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நொறுங்கிய  காரில் பயணித்த 4 நபர்களில் மூவர் பலியான நிலையில் ஒருவர் படு காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதால்  முதல்கட்டமாக காவல்துறை விசாரணையில் இவர்கள் கேரள மாநிலம் கோட்டையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. ஜேன் தாமஸ், கொய்கேல் , சோனிமோன் கே.ஜே வார்ம்வுட், ஜோபிஷ் தாமஸ் அம்பலத்திங்கல். இதில் ஷாஜி என்வர் பலத்த காயமடைந்துள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Continues below advertisement