துரை ; ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே பள்ளிக்கூடத்தில் படித்த நாட்கள் அனைத்தும் ஞாபகம் வருதே என்பது போல் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி ஆசிரியர்களை கௌரவித்தனர்.


பள்ளி நினைவுகள் நெஞ்சில்


மதுரை  யா.ஒத்தக்கடை பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி  அரை நூற்றாண்டுக்கு மேலாக இயங்கி வருகிறது.
இங்கு பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வாழ்வில் உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளனர். இருபாலர் பள்ளியாக செயல்பட்டு வந்த இது காலப்போக்கில் தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளியில் 1999 - 2001  ஆண்டில் அங்கு 11ஆம் வகுப்பு,  12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகள் மற்றும் பணியாற்றிய ஆசிரியர்கள் ரீயூனியன் நடைபெற்றது.


90-ஸ் கிட்ஸ் ரியூனியன் 


இதனை முன்னிட்டு பள்ளியின் நுழைவு வாயிலில் வாழைமரம் கட்டி திருமண மண்டபம் போல் பள்ளியை தயார் செய்திருந்தனர். மேலும் 90ஸ் கிட்ஸ்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகித்த பொருட்களான புளிப்பு மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய் , பூஸ்ட் மிட்டாய், சூட மிட்டாய், நுங்கு வண்டி, டயர் வண்டி, ஹீரோ பேனா, மை பாட்டில், சாக்பீஸ், குச்சி, சிலேடு, சட்டை , சுடிதார் ஆகியவற்றை தனியாக காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். அந்தப் பள்ளியில் பயின்ற 50க்கும் மேற்பட்ட  மாணவர்கள் மாணவிகள் அனைவரும் குடும்பம் குடும்பமாக தங்களது பிள்ளைகளளையும் , கணவர், மனைவி என அழைத்து வந்திருந்தனர். வகுப்பறை போல நாற்காலிகளை வரிசைப்படுத்தி அவர்கள் அனைவரும் அமர்ந்து அவர்களுக்கு பாடம் கற்பித்த தமிழ் ஆசிரியர் பாடம் எடுத்து சில கேள்விகளையும் கேட்டார். 23 ஆண்டுகளுக்குப் பின்பு பயின்ற பள்ளியில் தாங்கள் சேகரித்த நினைவுகளை மீண்டும் இந்த ரியூனியன் வாயிலாக கிடைத்தது என வந்திருந்த மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.


நினைவுகள் சுகமானது


மேலும் இது குறித்து முன்னாள் மாணவர் வெங்கல பிரபு கூறுகையில்...,” இது போன்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பது மிகப்பெரிய விஷயம். அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து உழைத்த சக நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்களது வகுப்பு ஆசிரியர்கள் அனைவரையும் சந்தித்தோம். அவர்களோடு பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளி நினைவுகளை தூண்டும் வகையில் 90-ஸ் கிட்ஸ் மிட்டாய்கள் முதற்கொண்டு டிஸ்பிலே செய்திருந்தோம். அது அனைவரையும் கவர்ந்தது. எங்களது நண்பர்கள் பலரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இப்படியான நிகழ்ச்சி மனதை லேசாக்கிவிட்டது. மீண்டும் இப்படி ஒரு சிறப்பான நிகழ்ச்சியை நடத்த முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சியின் நினைவை சேமிக்கும் வகையில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். எல்லோரும் இது போன்ற சந்திப்புகளை நடத்த வேண்டும். இது கண்டிப்பாக மன நிறைவை ஏற்படுத்தும் ” என மகிழ்ச்சி தெரிவித்தார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - “அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்