Thiruparankundram: திருப்பரங்குன்றம் மலை விவகாரம்; உள்ளூர் மக்கள் தள்ளி நிற்பது ஏன்?

திருப்பரங்குன்றம் குறித்து, தவறான விசயங்கள் வெளியிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

Continues below advertisement

ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு பகுதியில் இருந்தே ஏராளமான நபர்கள் இதில் கலந்து கொண்டதாகவும் களநிலவரம் தெரிவிக்கின்றது.

Continues below advertisement

திருப்பரங்குன்றம் மலை

மதுரையில் திருப்பரங்குன்றம், அழகர்மலை, யானைமலை, பசுமலை, நாகமலை, என சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமானின் முதல்படை வீடு திருப்பரங்குன்றத்தில் தான் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைமேல் உள்ள சிக்கந்தர் தர்ஹாவிலும் ஏராளமான இஸ்லாமிய மக்களும் வழிபட்டு வருகின்றனர். அதே போல் ஆசீவகம், சமணம், சைவம் ஆகிய சமயங்களுடன் அமையப்பெற்றது மலையில் சமய நல்லிணக்கத்திற்கான அடையாம் நிறைந்த தலமாக இருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட சர்ச்சை

இந்நிலையில் இந்த சிக்கந்தர் தர்ஹாவை முன் வைத்து கிளம்பியுள்ள பல்வேறு சர்ச்சைகளால் கடந்த 4-ஆம், தேதி 5- ஆம் தேதிகளில் மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு போடும் அளவிற்கு பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது, பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிடும்போது, இங்கு அனைத்து சமயங்களுக்கும் இடமளிக்கப்பட்டு, சமய நல்லிணக்கத்தோடு இங்குள்ள பொதுமக்கள் அன்புடன் வாழ்ந்து வருகின்றனர். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுதான் திருப்பரங்குன்றம் மலையும். இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு விழாக்களில் இந்துக்கள் பங்கேற்கின்றனர். இந்துக்கள் பாதயாத்திரை மேற்கொள்ளும்போது இஸ்லாமியர்கள் நீர், மோர் வழங்கி உபசரிப்பது இயல்பான காட்சியாகும். அந்த நிலையே திருப்பரங்குன்றம் மலையிலும் தொடர வேண்டும், என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

திருப்பரங்குன்றம் போராட்டம் நிலை குறித்து தெரியுமா?

அதே நிலை தான் திருப்பரங்குன்றம் மக்கள் மனதில் உள்ளது. மாமன், மச்சான்களாக தாங்கள் ஒன்றுமையுடன் வாழ்வதாக தெரிவித்து வருகின்றனர். அதனால் தான் திருப்பரங்குன்றம் பகுதியில் பக்தர்கள் போல் கோயிலுக்குள் நுழைந்து போராடியவர்களுடன் இணையவில்லை என்று தெரிவிக்கின்றனர். உண்மை நிலையை தெரிந்துகொண்டுள்ள திருப்பரங்குன்றம் மக்கள் பெரும் அளவில் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கோயிலை முற்றுகையிட்டவர்கள் மற்றும் பழங்காநத்தம் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பலரும் வெளியூரை சேர்ந்த நபர்கள். குறிப்பாக ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு பகுதியில் இருந்தே ஏராளமான நபர்கள் இதில் கலந்து கொண்டதாகவும் களநிலவரம் தெரிவிக்கின்றது. இதனால் தான் திருப்பரங்குன்றம் மலை உரிமைப் பிரச்னையில் உள்ளூர் மக்கள் தள்ளி நிற்கிறார்கள். உள்ளூர் விவகாரம் எங்களுக்கு தெரியும் விலகி நிற்கவில்லை, தள்ளி நிற்கிறோம் என்று ஆழமான வார்த்தைகளில் தெரிவிக்கின்றனர்.
 

தவறான தகவல் பரப்ப வேண்டாம்

 
திருப்பரங்குன்றம் பகுதியில் பூர்வீகமாக வசிக்கும் பேச்சியம்மன் கோயில் வகையராக்கள் சிலர் கூறும்போது போது..,” திருப்பரங்குன்றத்தில் தற்போது பிழைப்பிற்காக வந்தர்கள். திருப்பரங்குன்றம் குறித்து முழுமையாக தெரிந்தது போல் மீடியாக்களில் பேசுகின்றனர். இது திருப்பரங்குன்றத்தின் ஒற்றுமையை சிதைக்கும். எனவே தவறான விசயங்கள் வெளியிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.
 
 
 
Continues below advertisement