வி.சி.க., தலைவர் தொல்.திருமாவளவன் ஏ.பி.பி.,நாடுவிற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது பேசியதாவது,


அமித்ஷா தமிழர்தான் பிரதமர் ஆகவேண்டும் என தெரிவித்துள்ளாரே?


எதிர்காலத்தில் தமிழரை பிரதமராக்க உறுதி ஏற்போம் என சொல்லியுள்ளார். தமிழ்நாட்டு மக்களை மயக்குவதற்காக உதிர்த்த சொல்லாடல். அவர் தமிழ்நாட்டில் 25 இடத்திலாவது பி.ஜே.பி., கூட்டணி  இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அவரை நம்புகிற தமிழரைகள் ஊக்கப்படுத்த அவ்வாறு சொல்லி இருக்கிறார்.


பிரதமராவதற்கு எடப்பாடி பழனிசாமி மட்டும் தமிழ்நாட்டில் தகுதி உள்ளது என தம்பிதுரை பேசியுள்ளது பற்றி என்ன நினைக்கிறீங்க?


எடப்பாடி பழனிசாமி பிரதமராக வந்தால் மகிழ்ச்சி தான். ஆனால் அ.தி.மு.க., தலைவர் மூத்த தலைவர் தம்பிதுரை, எடப்பாடியை பாராட்ட அவ்வாறு சொன்னாரா? அல்லது மோடி, அமித்ஷா போன்றவர்களை கேலி செய்ய அவ்வாறு சொன்னாரா? என்று தெரியவில்லை. அவருடைய விரும்பம் அவருடையது. அவ்வாறு விரும்ப உரிமை உள்ளது. ஆனால் பொதுவான அரசியல் பார்வையாளர்கள் இதை விளையாட்டாக எடுத்துக்கொள்வார்கள்.





பா.ம.க, பா.ஜ.க., அங்கம் வகிக்கும் கூட்டணியில் விசிக இடம் பெறாது என்ற கொள்கையில் உறுதியாக உள்ளீர்களா?


எப்போதும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். கொள்கை சார்ந்து எடுத்த முடிவு. இதில் எந்த தளர்வும் இல்லை ஊசலாட்டமும் இல்லை.


தமிழ்நாட்டில் இருந்து இந்திய பிரதமராக ஆவதற்கு யாருக்கு தகுதி இருக்குன்னு நெனக்கீறீங்க?


ஒவ்வொரு குடிமனுக்கும் அந்த தகுதி உள்ளது. முதல்வர், பிரதமதர் ஆவதற்கு வரையரை எதுவும் இல்லை. வேட்பாளராக நிற்க தகுதி இருந்தால் போதுமானது. நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றால் யாரும் பிரதமராகவும் தகுதி உள்ளது.




அடிக்கடி தமிழ்நாட்டில் போலீஸ் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற கேள்வியை நீங்களும் சிந்தனை செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகளும் தொடர்ந்து எழுப்பி வருவதற்கு என்ன காரணம்?


எப்போதும் காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனாலும் எப்போதும் போல காவல்துறையினர் தலித் விரோத மனநிலையில் இயங்கி வருகிறார்கள். அரசின் கவனத்தை ஈர்க்க இந்த விமர்சனங்களை முன் வைக்கப்படுகிறது.


விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உங்களை தவிர வெகுஜன மக்கள் ஈர்ப்பு உள்ள பெரிய தலைவர்களை நீங்கள் உருவாக்கவில்லை என்று கூறப்படுவது உண்மையா?
இது பொருத்தம் இல்லாத கேள்வி தலைவர்கள் யாரும் உருவாக்கப்படுவதில்லை. உருவாகிறார்கள்"