திருச்செந்தூர் - பாலக்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 16 முதலும் பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 17 முதலும் ஒரு முன்பதிவு இல்லாத விரைவு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி வண்டி எண் 16732 திருச்செந்தூர் - பாலக்காடு முன்பதிவில்லாத விரைவு ரயில் டிசம்பர் 16 முதல் திருச்செந்தூரிலிருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு பாலக்காடு சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 16731 பாலக்காடு - திருச்செந்தூர் முன்பதிவில்லாத விரைவு ரயில் டிசம்பர் 17 முதல் பாலக்காட்டில் இருந்து அதிகாலை 04.55 மணிக்கு புறப்பட்டு மாலை 03.45 மணிக்கு திருச்செந்தூர் வந்து சேரும். இந்த ரயில்கள் பாலக்காடு டவுன், புதுநகரம், கொல்லங்கோடு, முதலமடா, மீனாட்சிபுரம், பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சி மணியாச்சி, தாழையூத்து திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஆழ்வார்திருநகரி, நாசரேத் கச்சினாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதே போல் ராமேஸ்வரம் - அஜ்மீர் ஹம்சபார் வாராந்திர விரைவு ரயில் ராமேஸ்வரத்திலிருந்து டிசம்பர் 21 முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது. வண்டி எண் 20973 அஜ்மீர் - ராமேஸ்வரம் ஹம்சபார் வாராந்திர விரைவு ரயில் டிசம்பர் 18 முதல் அஜ்மீரிலிருந்து சனிக்கிழமைகளில் இரவு 08.10 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 20974 ராமேஸ்வரம் - அஜ்மீர் ஹம்சபார் வாராந்திர விரைவு ரயில் டிசம்பர் 21 முதல் ராமேஸ்வரத்திலிருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் இரவு 11.05 மணிக்கு அஜ்மீர் சென்று சேரும். இந்த ரயில்கள் மானாமதுரை, திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், கூடுர், நெல்லூர், விஜயவாடா, வாரங்கல், பல்ஹார்ஷா, சந்திராபூர், நாக்பூர், பீட்டல், இட்டார்சி, போபால், தேவாஸ், லட்சுமிபாய் நகர், பதேஹாபாத், ரட்லம் மன்டசோர், நிமாச், சித்தூர்கார், பில்வாரா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!