தேனி மாவட்டத்தில் உள்ள 198 ஆண்டிபட்டி, 199 பெரியகுளம், 200 போடிநாயக்கனூர், 201 கம்பம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு 1.1.2022 தேதியினை தகுதி நாளாக கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் அவர்களால் வெளியிடப்பட்டது. இன்று வெளியிடப்பட்ட வாக்காளர் வரைவு பட்டியலில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள்
- ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1,36,926 ஆண் வாக்காளர்களும் 1,40,418 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 34 என மொத்தம் 2,77,378 வாக்காளர்கள் உள்ளனர்.
- பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் 1,39,775 ஆண் வாக்காளர்களும் 1,45,325 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 105 பேரும் என மொத்தம் 2,85,205 வாக்காளர்களும் உள்ளனர்.
- போடிநாயக்கனூர் தொகுதியில் 1,35,950 ஆண் வாக்காளர்களும் 1,42,008 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 20 பேரும் என மொத்தம் 2,77,978 வாக்காளர்கள் உள்ளனர்.
- கம்பம் தொகுதியில் 1,40,408 ஆண் வாக்காளர்களும் 1,46,927 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 36 பேரும் என மொத்தம் 2,87,371 வாக்காளர்கள் உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 5,53,059 ஆண் வாக்காளர்களும் 5,74,678 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்கள் 195 பேரும் என மொத்தம் 11,27,932 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இப்பட்டியல் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது .
1.1 .2022 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2022 அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் 1.11.2022 முதல் 30.11.2021 வரையில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் சிறப்பு முகாம்கள் நாட்களான 13.1.2021 சனிக்கிழமை ,14.11.2021 ஞாயிற்றுக்கிழமை , 27.11.2021 சனி மற்றும் 28.11.2021 ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. மேற்கண்ட நாட்களில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அனைவரும் பெயர் சேர்க்க படிவம் 6 பெயரை நீக்க படிவம் 7 விபரம் இருத்தலுக்கான படிவம் 8 மற்றும் ஒரு தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வதற்கான படிவம் 8 மூலம் பொதுமக்கள் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் விண்ணப்பித்து பயனடையுமாறு தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்