தேனி மாவட்டத்தில் நடக்கும் திருவிழாக்களிலேயே மிகவும் பெரிய சித்திரை திருவிழா இது தான். தீராத நோய் தீர்க்கும் அற்புத சக்தியாகவே அம்மனை பக்தர்கள் வணங்கி வருகின்றனர். இதனால் நோய் கண்டவுடன் அம்மனுக்கு நேர்ந்து கொள்கின்றனர். நோய் குணமாகிய உடன் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். விழாக்காலங்களில் அம்மன் தினமும் ஒரு பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்மன் முத்துப்பல்லக்கிலும், பூ பல்லக்கிலும் பவனி வருவார். கோயில் தீர்த்தமாக கோயில் அருகில் உள்ள கிணற்று நீரையும், கண்ணீஸ்வரமுடையார் தீர்த்தமாக முல்லை ஆற்று நீரையும் பயன்படுத்துகின்றனர்.
இந்த கோயிலானது தேனியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இப்போது இந்த கோயிலின் வரலாற்றை சுருக்கமாக பார்க்கலாம். ஆதிகாலத்தில் ஒரு அசுரனை வெல்வதற்காக உமாதேவி அம்சம் பெற்ற கௌமாரியம்மன் இன்றைய தலம் இருக்கும் அடர்ந்த வனத்தில் தவமியற்றினார். அசுரன் கௌமாரியை தூக்கிச் செல்ல முயன்றான். இதனை அறிந்த கௌமாரி, பக்கத்தில் இருந்த அருகம்புல்லை எடுத்து அசுரன் மீது வீச, அது அசுரனை இரு கூறாக பிரித்து அழித்தார். அப்போது தேவர்கள் மலர்மாறி தூவ கௌமாரி இங்கேயே கன்னித்தெய்வமானார்.
HBD Sivakarthikeyan: 12 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி! குட்டி தளபதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் இன்று!
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் நடைபெறும். அப்படி நடைபெறும் திருவிழாக்களில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறும். அப்படி போடப்படும் ராட்டிங்கள் உட்பட பல்வேறு கடைகள் அமைப்பதற்கு உட்பட ஏலம் விடப்படும் அப்படி இந்த வருடத்திற்கான ஏலம் விடப்பட்டுள்ளது. செயல் அலுவலர் அலுவலகத்தில், இணை ஆணையர் பாரதி தலைமையில் நடந்த இந்த ஏலத்தில், ஒப்பந்ததாரர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினங்கள் அமைப்பதற்கான ஏலம் ரூபாய் 2கோடியே 55லட்சத்திற்கு விடப்பட்டது.
40 years of Vijay: குழந்தை நட்சத்திரம் முதல் தளபதி வரை! 40 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்!
கடந்த ஆண்டு 1 கோடியே 96 லட்சத்து ஏலம் விடப்பட்ட நிலையில் இந்தாண்டு 59லட்சத்து 40ஆயிரத்திற்கு அதிகமாக ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. இதே போல முடி காணிக்கை, கண் மலர் மற்றும் உணவுக் கூடங்கள் அமைப்பதற்கான ஏலமும் நடத்தப்பட்டு அதிக புள்ளிகள் அடிப்படையில் ஒப்பந்ததாரர்களால் எடுக்கப்பட்டது.