விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை அருகே  ராமு தேவன் பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு தற்போது வரை 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







 

பட்டாசு தொழில்

 

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலையின் காரணமாக தொடர்ந்து இங்கு பட்டாசு ஆலைகள் அதிகளவில் செயல்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தரமாக இருக்கும் என்பதால் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  தீபாவளிக்கு அதிகமாக பயன்படுத்தும் பட்டாசுகள் இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. 

 




 

விதி மீறல்கள்

 

உற்பத்தி அதிகரிக்க உற்பத்தியாளர்கள் விதிமுறைகளை மீறுவதாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் வரும் நிலையில் பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் வருவாய் துறை எனது தனிக்குழு அமைக்கப்பட்டு இந்த குழுக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் விருதுநகர் அருப்புக்கோட்டை சிவகாசி சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் என்பது மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

 




பட்டாசு ஆலையில் விபத்து


விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே முத்துச்சாமிபுரத்தில், விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில் அம்பிகா முருகர் ஜோதி முத்து உள்ளிட்ட 9 பட்டாசு தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 அறைகள் தரைமட்டமானது. இந்நிலையில் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.