தமிழக, கேரளா எல்லையை இணைக்கும் மாவட்டமாக பார்க்கப்படுவது தேனி மாவட்டம். தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட சுற்றுலாத்தலமான சுருளி அருவி உட்பட பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் குறிப்பாக கேரள செல்லும் வாகனங்கள் அதிகமாக பயன்படக்கூடிய முக்கிய சாலையாக தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலை பயன்படுகிறது. இந்த நிலையில்  தேனியில் இருந்து குமுளி செல்லும் சாலையில் தேனி உப்பார்பட்டி விளக்கு முன்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சார்பாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு இன்று (1ம் தேதி) முதல்  செயல்பாட்டுக்கு வந்துள்ளது.



சுங்கச்சாவடி கட்டணமாக வாகனங்களில் வகை மூலம் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.


1.கார் ஜீப் வேன் அல்லது இலகுரக வாகனம் ஒரு முறை பயணிக்க கட்டணமாக 50 ரூபாயும் கட்டணம் செலுத்தும் நேரத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள் திரும்ப பயணிக்க கட்டணம் ரூபாய் 80, வாகனம் ஒரு மாதத்திற்குள் 50 தடவைகள் ஒரு முறை பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர பாஸ்கட்டணம் ரூபாய் 1740 , சுங்கச்சாவடி அமைந்துள்ள மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக வாகனங்கள் தேசிய அனுமதி பெற்ற வாகனங்களை தவிர்த்து ஒரு வழி பயணத்திற்கான கட்டணம் ரூபாய் 25ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


2.  இலகுரக வணிக வாகன வகை, இலகு பொருள் வாகனம் அல்லது மினிபஸ் ஒரு முறை பயணிக்க கட்டணமாக 85 ரூபாயும், கட்டணம் செலுத்தும் நேரத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள் திரும்ப பயணிக்க கட்டணம் ரூபாய் 125, வாகனம் ஒரு மாதத்திற்குள் 50 தடவைகள் ஒரு முறை பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர பாஸ்கட்டணம் ரூபாய் 2 ஆயிரத்து 815 , சுங்கச்சாவடி அமைந்துள்ள மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக வாகனங்கள் தேசிய அனுமதி பெற்ற வாகனங்களை தவிர்த்து ஒரு வழி பயணத்திற்கான கட்டணம் ரூபாய் 40ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



3.பேருந்து அல்லது டிரக்  இரண்டு அச்சுக்கள் ஒரு முறை பயணிக்க கட்டணமாக 175ரூபாயும் கட்டணம் செலுத்தும் நேரத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள் திரும்ப பயணிக்க கட்டணம் ரூபாய் 265, வாகனம் ஒரு மாதத்திற்குள் 50 தடவைகள் ஒரு முறை பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர பாஸ்கட்டணம் ரூபாய் 5 ஆயிரத்து 895 , சுங்கச்சாவடி அமைந்துள்ள மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக வாகனங்கள் தேசிய அனுமதி பெற்ற வாகனங்களை தவிர்த்து ஒரு வழி பயணத்திற்கான கட்டணம் ரூபாய் 90ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


4.3 அச்சுக்கள் கொண்ட கொண்ட வணிக வாகனங்கள் ஒரு முறை பயணிக்க கட்டணமாக 195 ரூபாயும் கட்டணம் செலுத்தும் நேரத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள் திரும்ப பயணிக்க கட்டணம் ரூபாய் 290, வாகனம் ஒரு மாதத்திற்குள் 50 தடவைகள் ஒரு முறை பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர பாஸ்கட்டணம் ரூபாய் 6430 , சுங்கச்சாவடி அமைந்துள்ள மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக வாகனங்கள் தேசிய அனுமதி பெற்ற வாகனங்களை தவிர்த்து ஒரு வழி பயணத்திற்கான கட்டணம் ரூபாய் 95ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



5.பல அச்சுக்கள் கொண்ட கட்டுமான இயந்திரங்கள் அல்லது மண் ஏற்றிச் செல்லும் வாகனம் அல்லது பல அச்சுக்கள் கொண்ட வாகனம் ஒரு முறை பயணிக்க கட்டணமாக 275 ரூபாயும் கட்டணம் செலுத்தும் நேரத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள் திரும்ப பயணிக்க கட்டணம் ரூபாய் 415, வாகனம் ஒரு மாதத்திற்குள் 50 தடவைகள் ஒரு முறை பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர பாஸ்கட்டணம் ரூபாய் 9245 , சுங்கச்சாவடி அமைந்துள்ள மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக வாகனங்கள் தேசிய அனுமதி பெற்ற வாகனங்களை தவிர்த்து ஒரு வழி பயணத்திற்கான கட்டணம் ரூபாய்140ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


6.அதிக அளவு கொண்ட வாகனம் ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுக்கள் கொண்டவை ஒரு முறை பயணிக்க கட்டணமாக 340 ரூபாயும் கட்டணம் செலுத்தும் நேரத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள் திரும்ப பயணிக்க கட்டணம் ரூபாய் 505, வாகனம் ஒரு மாதத்திற்குள் 50 தடவைகள் ஒரு முறை பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர பாஸ்கட்டணம் ரூபாய் 11255 , சுங்கச்சாவடி அமைந்துள்ள மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக வாகனங்கள் தேசிய அனுமதி பெற்ற வாகனங்களை தவிர்த்து ஒரு வழி பயணத்திற்கான கட்டணம் ரூபாய் 170ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


வணிக உபயோகம் அல்லாத உள்ளூர்(தேனி மாவட்ட) வாகனங்களுக்கு 2022-Hpf23ம் ஆண்டு விதிக்கப்படும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 315 மாதாந்திர கட்டணம் தேவைப்படுவோர் சுங்கச்சாவடி அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.