நவராத்திரி திருவிழா தமிழக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரக்கூடிய வேலையில் ஐந்தாம் நாள் திருவிழாவான நேற்று மதுரை மாடக்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரி அம்மன் கோவிலில் மாபெரும் விளக்கு பூஜை நடைபெற்றது. நவராத்திரி திருவிழா இங்கு வெகு விமர்சையாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் ஒவ்வொரு நாளும் ஸ்ரீ கபாலீஸ்வரி அம்மன் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரக் கூடிய நிலையில் நேற்று ஊஞ்சல் உற்சவத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து கோயில் அருகே இருக்கக்கூடிய திறந்தவெளி மைதானத்தில் 508 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு மனம் உருகி வேண்டிக்கொண்டனர். இந்த விளக்கு பூஜையில் மாடக்குளம் மற்றும் அருகில் இருக்கக்கூடிய பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அம்மனின் அருளை பெற்று சென்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கர்நாடகாவில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள்
இதுகுறித்து மாடக்குளம் கிராமத்தை சேர்ந்த நவனீத கிருஷ்ணன் கூறுகையில்..,” மாடக்குளம் கிராமம் பாரம்பரியம் கொண்ட கிராமம். மதுரையில் பெரிய நீர்பிடிப்பு பகுதியாக பார்க்கப்படும் மாடக்குளம் கண்மாயும் இங்கே தான் அமைந்துள்ளது. இதனால் விவசாயம் பிரதானமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கிராமத்தில் சிறு தெய்வ வழிபாடு மிக முக்கியமானது. இதைச் சார்ந்த மக்கள் ஆன்மீகத்திலும் மிகுந்த ஈடுபாடுடன் வாழ்ந்து வந்துள்ளனர். அதனால் தான் மாடக்குளத்தில் திருவிழாக்கள் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நேற்று எங்கள் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரி அம்மன் கோயிலில் மாபெரும் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டால் விவசாயம் செழிக்கும், உலக நன்மை பெருகும், குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்