சின்னமனூர் அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயை பலியாகினர். சின்னமனூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தேனி மாவட்டம் தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சின்னமனூர் துர்க்கை அம்மன் கோவில் அருகே உள்ள நர்சரி கார்டன் முன்பு சின்னமனூரில் இருந்து உத்தமபாளையம் நோக்கி பயணித்த இருசக்கர வாகனமும் கம்பத்தில் இருந்து போடி நோக்கி சென்ற ஷிப்ட் காரும் எதிர் பாராத விதமாக நேருக்கு நேர் மோதியதில் டூவீலரில் வந்த அம்மாபட்டியை சேர்ந்த அப்பாச்சி (65) மற்றும் இதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (65) இருவரும் சம்பவ இடத்திலேயை பலி சம்பவ இடத்திற்கு விரைந்த சின்னமனூர் காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த இருவரின் பிரேதத்தை கைப்பற்றி சின்னமனூர் அரசு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது மேலும் காரை ஓட்டி வந்த வெங்கடாசலம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
15 வயது மாணவியை கடத்தி சென்ற 22 வயதுமிக்க வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது.
கம்பம் தாத்தப்பன் குளத்தைச் சேர்ந்தவர் விஜய் (வயது 22). டிராக்டர் டிரைவர். இவர், பிளஸ்-2 படிக்கும் 15 வயது மாணவியுடன் பழகி வந்தார். அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்ைத கூறி, விஜய் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தனர்.