கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அருவியில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்க 30வது நாளாக தொடர்வதாக வனத்துறை அறிவித்துள்ளது.

Continues below advertisement

Sukran Peyarchi 2023: டிசம்பர் மாதத்தில் கோடிகளில் செழிக்கப்போவது யார்? - 12 ராசிகளுக்குமான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் இதோ..!

Continues below advertisement

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் சிறு, குறு ஓடைகள் வழியாக வந்து கும்பக்கரை ஆற்றை அடைந்து அருவியாக ஆர்ப்பரிக்கிறது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

Migjam Cyclone: புயலில் இருந்து தப்புகிறது தமிழகம்! ஆனால் மழை சரவெடிதான்! - எங்கெல்லாம்?

மேலும், கும்பக்கரை அருவியில் குளித்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல்வேறு மூலிகைச் செடிகள் நடுவில் கடந்து வரும் நீரில் குளிப்பதால் பல்வேறு நோய்களில் மீண்டு வர உதவுவதாக கூறுகின்றனர். மேலும்,  கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து வரக்கூடிய நீரானது கடும் குளிர்ந்த நிலையில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இந்த அருவியில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இயற்கை சூழலில் பசுமை நிறைந்த அடர்ந்த வனப் பகுதிகளுக்கு  நடுவில் இந்த அருவி அமைந்துள்ளதால் கும்பக்கரை வனப்பகுதியில் விலங்கினங்கள் காட்டுமாடு சிறுத்தை அரிய வகை குரங்கினங்கள், மான், புள்ளி மான், மிளா மான் உள்ளிட்ட அரிய வகை விலங்கினங்களும் உள்ளது.

Latest Gold Silver Rate: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ரூ.47,000 கடந்து விற்பனை.. அதிர்ச்சியில் மக்கள்..

மேக் போட காசு இல்லையாம்... ஐடி நிறுவன பெண் செய்த வேலை! சிக்கியது எப்படி?

கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக மழை பொழிவு இல்லாத இருந்த நிலையில் அருவியில் சற்று நீர்வரத்து குறைந்து வந்தது.இந்நிலையில்   கடந்த ஒரு மாதமாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அருவியில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 1ம் தேதி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 30வது நாளாக  நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறை அறிவித்துள்ளனர்.