முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான தேக்கடி ஏரி மற்றும் பெரியாறு அணை பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணைக்குள் நீர்வரத்து ஒரே நாளில் 891 கன அடியாக அதிகரித்தது.
ED Raid : 100 பாட்டில் மது, 5 கோடி பணம்: காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு.. ED அதிகாரிகள் அதிர்ச்சி
முல்லைப்பெரியாறு அணையில் கடந்த புதன்கிழமை நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை மற்றும் தேக்கடி ஏரியில் மழை பெய்யவில்லை. அன்று இரவு மற்றும் வியாழக்கிழமை அதிகாலை முதல் தேக்கடி ஏரியில் 71.12 மில்லி மீட்டர் மழையும், பெரியாறு அணையில் 49.0 மி.மீ. மழையும் பெய்தது. அதனால் வெள்ளிக்கிழமை அன்று நிலவரப்படி அணைக்குள் நீர் வரத்து 1,284.31 கன அடியாக வந்தது. அதாவது ஒரே நாளில் 891 கன அடியாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
முல்லைப்பெரியாறு அணையில் தொடர்ந்து 11-ஆவது நாளாக தமிழக பகுதிக்கு தண்ணீர் 1,867 கன அடியாக வெளியேற்றப்படுவதால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் உள்ள 4 மின்னாக்கிகளும் முழுமையாக இயங்குகிறது. அதன் மூலம் முழு கொள்ளளவான 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நீர்மட்டம் 136.95 அடி (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 6,357 மில்லியன் கன அடி, அணையில் இருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,867 கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 1,284.31 கன அடியாகவும் காணப்படுகின்றது.