தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் உறவினர் வீட்டிற்கு பேரையூர் சேர்ந்த பன்னீர்செல்வம் (24), மீனம் பட்டியை சேர்ந்த சபரிவாசன் (10), நிலக்கோட்டை  சேர்ந்த மணிமாறன் (10), நிலக்கோட்டை சேர்ந்த  ருத்ரன் ஆகிய 4 பேரும் பாபி பட்டி குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது இவர்கள் நான்கு பேரில் ஒருவர் தண்ணீரில்  தவறி விழவே அவரை காப்பாற்றுவதற்காக ஒன்றன் பின் ஒன்றாக அடுத்த  மூன்று பேரும் குளத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் குளத்து நீரில் மூழ்கி பன்னீர்செல்வம், சபரிவாசன், மணிமாறன் ஆகிய 3 பேரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.




IND vs SA 1st T20 LIVE: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி : தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு


இந்த சம்பத்தை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற முயன்ற போது ருத்ரன் என்ற 7 வயது சிறுவனை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இந்த சம்பவம் பற்றி பெரியகுளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மொத்தம் நான்கு பேரையும் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.




Flipkart: அடடா தள்ளுபடி! அதிரடி ஆஃபர்களுடன் சீசன் விற்பனையை தொடங்கிய ஃப்ளிப் கார்ட்!


ஆனால் பன்னீர்செல்வம் , சபரிவாசன், மணிமாறன் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ருத்ரன்தேனி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண