IND vs SA 1st T20 LIVE : அரைசதம் கடந்த மில்லர்... மீண்ட தென்னாப்பிரிக்கா அணி..!
IND vs SA 1st T20 LIVE: இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதலாவது டி20 ஸ்கோர், அவுட் போன்றவற்றை உடனுக்குடன் இங்கே காணலாம்.
இந்திய பந்து வீச்சாளர்களின் பத்துகளை நாலாபுறமும் சிதறவிட்ட மில்லர் 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 12 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் அடித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் அடித்துள்ளது.
அக்சார் பட்டேல் வீசிய 9 வது ஓவரில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டி காக் 22 ரன்களில் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் அடித்துள்ளது.
அதிரடியாக விளையாடி கொண்டிருந்த பிரிட்டோரியசை கீளீன் போல்ட் செய்தார் ஹர்ஷல் பட்டேல்.
ஹர்திக் பாண்டியா வீசிய 5 வது ஓவரில் தென்னாப்பிரிக்கா வீரர் பிரிட்டோரியஸ் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை பறக்க விட்டார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 4 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் அடித்துள்ளது.
புவனேஸ்வர் குமார் வீசிய 3 வது ஓவரில் தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா 8 பந்துகளில் 10 ரன்கள் அடித்து விக்கெட் கீப்பர் பண்ட்டிடம் கேட்ச் ஆனார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் குவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 16 பந்துகளில் 29 ரன்கள் இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அவுட்டானார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 48 பந்துகளில் 76 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் அடித்துள்ளது.
பார்னல் வீசிய 7 வது ஓவரில் அடித்து ஆடிக்கொண்டிருந்த ருதுராஜ் 23 ரன்களில் அவுட்டானார்.
பவர் ப்ளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் அடித்துள்ளது. இஷான் கிஷன் 26 ரன்களுடனும், ருதுராஜ் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் அடித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்குஎதிரான முதல் போட்டியில் இந்திய அணி 2 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் அடித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் வீசிய முதல் ஓவரில் இஷான் கிஷன் 2 பௌண்டரிஅடித்து மிரட்டினார்.
1st T20I தென்னாப்பிரிக்கா XI: டி காக் (விக்கெட் கீப்பர்), டி பவுமா (கேப்டன்), ஆர் வான் டெர் டஸ்சன், மில்லர், ஸ்டப்ஸ், பார்னெல், பிரிட்டோரியஸ், மகாராஜ், ஷம்சி, ரபாடா, நார்ட்ஜே.
1st T20I இந்தியா XI: ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சார் பட்டேல், ஹர்சல் படேல், புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.
இந்தியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
Background
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. முதல் போட்டியானது (இன்று) ஜூன் 9 ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இரவு 7:00 மணிக்கு நடைபெறுகிறது.
முன்னதாக, இந்த தொடரில் இந்திய அணியில் அனுபவ வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கேஎல் ராகுல் தலைமையில் முற்றிலும் இளம் இந்திய படையை பிசிசிஐ களமிறக்கியது. இந்தநிலையில், நேற்று காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் விலகினார். அவருக்கு பதிலாக துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அணியை வழிநடத்துவார் என்றும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவும் நியமிக்கப்பட்டனர்.
டெல்லியில் நடைபெறும் முதல் டி20 போட்டிக்குப் பிறகு, தொடரை முடிக்க அணிகள் இரண்டாவது போட்டிக்காக ஜூன் 12ஆம் தேதி கட்டாக், ஜூன் 14ஆம் தேதி விசாகப்பட்டினம், ஜூன் 17ஆம் தேதி ராஜ்கோட் மற்றும் ஜூன் 19ஆம் தேதி பெங்களூரிலும் டி20 தொடர்கள் நடைபெற இருக்கின்றன.
இந்தியா Vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எங்கே ? எப்படி பார்க்கலாம் ?
புதுதில்லியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 எச்டி சேனல்களில் பார்க்கலாம். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா போட்டியின் நேரடி ஒளிபரப்பு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இரவு 7 மணி முதல் கிடைக்கும்.
இந்திய அணி:
ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கேப்டன்)(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ரவி பிஷ்னோ, ரவி பிஷ்னோ குமாரி. , ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -