இரண்டாம்நிலைக் காவலர், சிறப்பு காவல்படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான பொதுத்தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறித்துள்ளது. இதற்கு இணையவழியில் விண்ணப்பம் பதிவு செய்வதற்கு உதவும் வகையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.



காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான பதவிகள்  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும். பொதுத்தேர்வு, நேர்முகத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கடந்த சில நாள்களுக்கு முன்பு காவல்துறை துணை ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறைக்கான பதவிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 30.06.2022 தேதியிட்ட அறிவிப்பாணை எண் 02/2022 வழியாக இத்தேர்வுகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியின் கீழ் வரும் இந்த பதவிகள் முழுநேரப் பணியாகும். இதில் இரண்டாம் நிலைக் காவலர் மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படைக்கு பொது மற்றும் ஆண்கள் பிரிவில் 1526 பேரும், பெண்கள் 654 பேர் என மொத்தமாக 2180 பதவிகளுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.



அதேபோல, இரண்டாம் நிலைக் காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல்படைக்கு பொது மற்றும் ஆண்கள் பிரிவில் 1091 பணியிடங்களும், சிறை மற்றும் சீர்திருத்தத்துறையில் இரண்டாம் நிலை சிறைக்காவலர் பணியிடங்களுக்கு பொது மற்றும் ஆண்கள் பிரிவில் 153 பணியிடங்களும், பெண்கள் பிரிவில் 8 பணியிடங்களும் என மொத்தமாக 161 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பாளர் பணிகளுக்காக பொது மற்றும் ஆண்கள் பிரிவில் 120 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட நான்கு பதவிகளுக்கு ஆண்கள் 2,890 பேர் பெண்கள் 662 பேர் என்று மொத்தமாக 3552 பதவிகளுக்கு பொதுத் தேர்வுகள் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.


Job Notification : காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது தேர்வு வாரியம்.. முழு விவரம்..



தற்போது சீருடை பணியாளர் தேர்வுக்கு தயாராகும் மற்றும் விண்ணப்பிப்பவர்கள் வசதிக்காக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உதவி சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட போலீசார் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்தல் குறித்த விவரங்களை இந்த உதவி மையத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.  இந்த உதவி மையம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இந்த மையத்தை 04546-253106 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண