”மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், எந்தவித தகவலும் தெரிவிக்காமலும், கருத்து கேட்காமலும், உயர்கல்வி துறை அமைச்சரான எனக்கும் தெரிவிக்காமல், கௌரவ விருந்தினர் என அழைக்கிறார்கள். துணைவேந்தரை கேட்டால் , தனக்கு எதுவும் தெரியாது எனவும் எல்லாம் ஆளுநர் மாளிகையில் இருந்துதான் சொல்கிறார்கள் என தெரிவிக்கிறார். பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இடையே, ஆளுநர் அரசியலை புகுத்துகிறார் என்ற ஐயம் வருகிறது.



ஆளுநரை பொறுத்தவரை அவர் ஆளுநராக இருப்பதைவிட, பாஜகவின் பிரச்சாரத்தை செய்கின்ற ஒருவராகத்தான் இருக்கிறார். அரசை ஆலோசிக்காமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்தது பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு,  மாணவர் சங்க மதுரை புறநகர் மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.





இதுகுறித்து கைது செய்யப்பட்ட நபர்கள் நமக்கு அனுப்பிய தகவலில், “தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றிலேயே சிறப்பு விருந்தினர் என்ற பொருந்தாத விதியை திணித்து, பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் தமிழக ஆளுநர் ரவியை கண்டித்தும், இணை அமைச்சர் எல்.முருகனை அழைத்து வந்து காவி மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த விருந்தினர். ஆளுநர் வருகையை தமிழக அரசே புறக்கணிக்கும் போது இந்திய மாணவர் சங்கம் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என கூறி இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் ராகுலை சமயநல்லூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் காவல்துறையினர்  ராகுலின் வீட்டை முற்றுகையிட்டனர்.



’ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த நீங்கள் செல்லக்கூடாது. உங்களை கைது செய்யப் போகிறோம்’ எனக் கூறி காத்திருந்தனர். ஒரு வழியாக சமயநல்லூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாலசுந்தர் அவர்கள் தலைமையில் 30 காவல்துறையினர் இன்று வேனில் ஏற்றிச் சென்றனர். முன்னதாக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பட்டமளிப்பு விழாவை ரத்து செய்துவிட்டு தமிழக அரசு மற்றும் இணை வேந்தரின் ஆலோசனையோடு மாற்று தேதியில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ் கே பொன்னுத்தாய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. உமா மகேஸ்வரன், வாலிபர் சங்கம் மாவட்டச் செயலாளர் எஸ்,கார்த்திக், சிஐடியு கருணாநிதி,   உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினரை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினோம்” என தெரிவித்துள்ளனர்.