கேரளாவில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படும் ஏலக்காய், நறுமண பொருட்களில் ஒன்றாகும். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் சுமார் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இந்த ஏலக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாயத்தில் பெரும்பாலும் தமிழக தோட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிலோ வரை ஏலக்காய் வர்த்தகம் என்பது நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது.
Vinayagar Chaturthi 2022 : விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் ரெடி! ஸ்டேட்டஸ நிரப்ப தயாராகுங்க!
இந்த விற்பனையானது கேரள மாநிலம் புத்தடி மற்றும் தேனி மாவட்டம் போடியில் உள்ள நறுமணப் பொருள் வாரியத்தில் ஆன்லைன் மூலம் ஏல முறையில் விற்பனை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இரு முறை ஆன்லைன் மூலம் ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Gautam Adani : அடுத்தடுத்து பிஸினஸ் மூவ்! உலக பணக்கார பட்டியலில் 3 வது இடத்தில் அதானி!!
இந்த ஏலத்தில் போடி, தேவாரம், கோம்பை, கம்பம், குமுளி கட்டப்பனை மற்றும் தமிழகத்தின் இதர வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலக்காய்களை கொள்முதல் செய்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதி மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது.
கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலும் ஏலக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் அடிக்கடி கனமழை பெய்து வருவதுடன், பலத்த காற்று வீசுகிறது. இதனால் ஏலக்காய் செடிகள் சேதம் அடைந்தன.
மேலும், ஏலக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வரத்து குறைந்ததால் ஏலக்காய் விலை தற்போது உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.750 என விற்ற ஏலக்காய், தற்போது கிலோ ரூ.1,100-க்கு விற்பனையானது. ஒருபுறம் ஏலக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டாலும், அதன் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.