தேனி அருகே உள்ள அரண்மனை புதூரைச் சேர்ந்த மீனா என்பவர் தேனி நகரில் உள்ள பூர்விகா மொபைல்ஸ் என்ற நிறுவனத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆப்பிள் ஐபோன் 5 என்ற மாடல் செல்போனை ஒரு வருட உத்தரவாதத்துடன் வாங்கி உள்ளார்.


மேலும் படிக்க: ADMK : கட்சியை கெடுப்பது ஓபிஎஸ்தான்.. குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி



இந்நிலையில், வாங்கி பயன்படுத்திய ஆறாவது மாதத்திலேயே அந்த ஆப்பிள் ஐபோன் மொபைல்ஸ் பழுதாகி மீண்டும் அதை ஆன் செய்ய முடியாத நிலைக்கு சென்றது. இதனைத் தொடர்ந்து மொபைல் வாங்கிய பூர்வீகா நிறுவனத்தில் மொபைலில் ஏற்பட்ட பழுதை நீக்கி தர விற்பனை நிறுவனத்தில் கொடுத்தும் பழுது நீக்கி தரப்படாத நிலையில் அவருக்கு உரிய பதிலும் அளிக்கப்படாமல் மிரட்டி அலைக்கழிப்பு செய்துள்ளனர்.


IND vs ENG Highlights: ஜோ ரூட் சாதனை சதம்.. பேர்ஸ்டோவ் சதம்... இமாலய இலக்கை சேஸ் செய்து வென்ற இங்கிலாந்து !



இதனால் மனமுடைந்த மீனா பூர்விகா மொபைல்ஸ் விற்பனை நிலையத்தில் அவர் வாங்கிய ஆப்பிள் ஐபோன் நிறுவன மொபைலை விற்பனை செய்வதற்கு அங்கீகாரமே இல்லாத நிலையில், விற்பனை செய்துள்ளதும் போலியாக ஒரு வருட உத்தரவாதம் எனக் கூறி ஏமாற்றியுள்ளதும்  தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மீனா தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.



இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணைய உறுப்பினர்கள் மனுதாரர் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் நுகர்வோரை பாதிப்புக்கு உள்ளாகியதும் ஏமாற்றியதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட நுகர்வோரான மீனாவிற்கு தேனியில் உள்ள பூர்விகா மொபைல்ஸ் நிறுவனம் 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அந்த நுகர்வோருக்கு மேலும் புதிய ஆப்பிள் ஐபோன்  மொபைல் போன் ஒன்றையும் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று தேனி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுந்தர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண